ஷாருக்கானுக்கு ஆபரேஷன்!!
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் கடந்த சில மாதங்களாக கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். தொடர்ச்சியான படப்பிடிப்பு மற்றும் காயம் காரணமாக அவர் இடது காலில் ஏற்பட்ட வலி நீங்க வில்லை. இந்த வாரத் தொடக்கத்தில் ஷாருக்கானுக்கு காலில் வலி அதிகரித்தது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள பிரீச்கேண்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று அவரது இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. டாக்டர் சஞ்சய் தேசாய் தலைமையிலான டாக்டர்கள் குழு இந்த ஆபரேசனை நடத்தியது. ஷாருக்கானுக்கு ஆபரேசன் செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் மும்பை திரை உலக பிரபலங்கள் பலர் மருத்துவமனைக்கு வந்து அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து ஷாருக்கான் இன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஷாருக்கான் 4 நாட்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவரது படிப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
Average Rating