கணவனைப் பழிவாங்க சாலை விதிகளை மீறி ரூ.6 லட்சம் அபராதம் கட்ட வைத்த சவுதி பெண்ணின் சாமர்த்திய வீடியோ!!

Read Time:2 Minute, 15 Second

e8a2f6fa-08c4-4c67-89f3-80fd9c47d870_S_secvpfஇரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவனைப் பழிவாங்க, சாலை விதிகளை மீறி தன் கணவரை 6 லட்ச ரூபாய் அபராதம் கட்டும்படி செய்துள்ள சவுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் சாமர்த்தியமான வீடியோ, இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சமீபத்தில் 2வது திருமணம் செய்தார். இதனால் கடும் அதிருப்தியுற்ற அவரது முதல் மனைவி, சரியாக திருமண நாள் அன்று கணவரின் காரை, தனது சகோதரரை ஓட்டச் செய்து, அருகில் அமர்ந்து கொண்டார். அந்த கார் நகரின் அனைத்து சாலைகளிலும் சிவப்பு விளக்கு சிக்னலை தாண்டிச் சென்றது.

சவுதி அரேபியாவின் சாலைகளில் சிக்னலுக்கு அருகே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். சிவப்பு சிக்னலை தாண்டும் வாகனங்கள் ஃப்ளாஷ்லைட் வெளிச்சத்தில் கேமராவால் உடனே படம்பிடிக்கப்படும். பின்னர் போக்குவரத்து அதிகாரிகள் சிக்னலை மீறிய வாகனத்தைக் கண்டறிந்து ரூ.8000 முதல் ரூ.15000 வரை அபராதம் விதிப்பார்கள்.

கணவரை பழிவாங்க நினைத்த சவுதி பெண்ணும் அவரது சகோதரரும் அந்த நாள் முழுவதும் சிவப்பு சிக்னலை தாண்டி காரை ஓட்டிக்கொண்டே இருந்தனர். அந்த வகையில் காரின் உரிமையாளரான அவரது கணவருக்கு 80 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6 லட்ச ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு சாலையில் சிவப்பு சிக்னலை தாண்டி, காரை முன்னும் பின்னும் நகர்த்தி அபராதத் தொகையை கூட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட காட்சிகள்:

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் இணைந்த த்ரிஷா – ராணா?
Next post டெல்லி- பாட்னா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் முன்பதிவு பெட்டியில் கொள்ளையடித்த பெண் சிக்கினார்!!