பெனாசிர் ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு: 20 பேரிடம் துருவித் துருவி விசாரணை

Read Time:4 Minute, 15 Second

pakbenazir_butto.jpgபெனாசிர் ஞீட்டோ நாடு திரும்பிய போது அவரை வரவேற்று நடந்த ஊர்வலத்தின் போது ஏற்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 20 பேரை பிடித்து போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பெனாசிர் ஞீட்டோ 8 ஆண்டு வெளிநாட்டு வாசத்திற்கு பிறகு கடந்த 18 ம் தேதி நாடு திருமபினார். அப்போது அவரை வரவேற்க அவரது கட்சியினரும் ஆதரவாளர்களும் லட்சக்கணக்கில் கராச்சி நகரில் திரண்டனர். அவர் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட போது அந்த ஊர்வலத்தில் அடுத்தடுத்து இருமுறை குண்டுகள் வெடித்தன. இந்த பயங்கர சம்பவத்தை தற்கொலைப்படை தீவிரவாதிகள்தான் நடத்தியிருக்க வேண்டும் என்று கராச்சி போலீசார் கருதுகின்றனர். இந்ச கொடூர தாக்குதலில் பெனாசிர் ஞீட்டோ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார் என்றாலும் 140 பேர் பலியானார்கள். 500 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தார்கள். பாகிஸ்தானில் நடந்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலாக கருதப்படும் இந்த சம்பவம் குறித்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. முதலில் இந்த தாக்குதலில் ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி சம்பந்தப்பட்டிருந்ததாக போலசார் தெரிவித்தனர். ஆனால் இரண்டு தற்கொலைப்படை தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளது பிறகுதான் தெரிய வந்தது.

முதல் தற்கொலைப்படை தீவிரவாதியின் தலை கண்டெடுக்கப்பட்டு அதை வைத்து முதல் தற்கொலைப்படை தீவிரவாதியின் அடையாளம் அறியப்பட்டு வருகிறது. இதே போல சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பல தலைகளில் இருந்து இரண்டாவது தீவிரவாதியின் தலையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிதறி கிடந்த கண்கள், தாடி , மற்றும் முக சதைகள் ஆகியவற்றை வைத்து டாக்டர்கள் தடயவியல் நிபுணர்கள், ராணுவ நிபுணர்கள் ஆகியோர் உதவியுடன் அந்த தீவிரவாதிகளின் தலை உண்மையிலேயே எப்படி இருக்கும் என்ற வரைபடத்தை தயாரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக 20 பேரை பிடித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் சந்தேகத்திற்கு இடமான தீவிரவாதிகள் இல்லை என்றும் இருந்தாலும் இவர்கள் குறித்த சில தகவல்கள் விசாரணைக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இவர்களில் பலர் சம்பவ இடத்தில் காயம் அடைந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.தற்கொலைப்படை தீவிரவாதிகள் வெடித்த குண்டுகளில் உலோக துண்டுகள் ஏராளமாக வைக்கப்பட்டிருந்தன என்றும் அதனால்தான் உயிர்ப்பலி அதிகமாக இருந்தது என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இலஞ்சம் பெற்ற பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் கைது
Next post இந்தியா முழுவதும்: ஒரே நாளில் 67 பேருக்கு ஆயுள் தண்டனை