புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: பத்தாவது சந்தேகநபர் இரகசிய புலனாய்வுப் பிரிவினரால் கைது!!!!

Read Time:1 Minute, 57 Second

timthumb (11)புங்குடுதீவு மாணவி செல்வி வித்தியா சிவலோகநாதன் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட படுபாதகச் செயல் தொடர்பாக ஏற்கனவே கடந்த மாதம் 14ஆம் திகதி மூவரும் 17ஆம் திகதி ஐவரும் கடந்த 20ஆம் திகதி சுவிஸ் குமார் என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் நேற்றையதினம் அதிகாலை இந்த சம்பவம் தொடர்பாக பத்தாவது நபர் ஒருவரும் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நயினாதீவு ஐந்தாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், வேலணை பிரதேச சபையின் உப பிரதேசசபை அலுவலகமான புங்குடுதீவு பிரதேச சபையில் இயந்திர இயக்குநராக கடமையாற்றி வருபவருமான தர்சன் என அழைக்கப்படும் குறிச்சந்திரன் நாதன் நாகதர்சன் என்பவர் நேற்றுஅதிகாலை இரகசியப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்ட நிலையில் 48மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ளனர் என்று இணையத்திற்கு கிடைக்கப் பெற்ற விசேட தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

மேற்படி தர்சன் என்பவர் திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையாவார். அது மாத்திரமன்றி இவரது தந்தை மிக நீண்டகாலமாகவே வேலணைப் பிரதேச சபையில் கடமையாற்றி வருபவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலக்காட்டில் வீட்டுக்குள் கல்லூரி பேராசிரியை மர்மச்சாவு!!
Next post திருச்சூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி ரெயில் மோதி பலி!!