சினேகாவின் வளைகாப்பு…!!

Read Time:1 Minute, 46 Second

sneha21நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 12-ந் திகதி, சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப்பின் சினேகாவும், பிரசன்னாவும் தனிக்குடித்தனம் நடத்தினார்கள். சினேகா இப்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு வருகிற ஆகஸ்டு மாதம் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.

7 மாத கர்ப்பிணியான சினேகாவுக்கு சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வளைகாப்பு நடந்தது. சினேகாவின் தந்தை ராஜாராம், தாயார் பத்மாவதி, பிரசன்னாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாயார் புவனேஸ்வரி மற்றும் நெருங்கிய உறவினர்கள், வளைகாப்பில் கலந்துகொண்டார்கள். நடிகர்கள் சிபிராஜ், நரேன், நடிகைகள் மீனா, சங்கீதா, பாடகர் கிருஷ், டைரக்டர் ஹரியின் மனைவி பிரீதா ஹரி ஆகியோர் வளைகாப்புக்கு வந்து சினேகா-பிரசன்னா ஜோடியை வாழ்த்தினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உண்மையில் மோதலா??? காதலா???
Next post எதிர்ப்பை மீறி கள்ளத்தொடர்பு: 17 வயது இளம்பெண்ணின் கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை தலைமறைவு!!