கோபியோடு ‘கா’ விட்ட கோபிகா! -ஒரு வருடத்திற்கு கால்ஷீட் நஹி!

Read Time:1 Minute, 52 Second

gobika02.jpgஎனக்கு பிடித்த ரோல்கள் கிடைத்தால்தான் தமிழ் படங்களுக்கு கால்ஷீட். இல்லையென்றால் இருக்கவே இருக்கு மலையாளமும், தெலுங்கு படங்களும்! இப்படி மார்தட்டுகிறார் கோபிகா. பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் விஜி இயக்கும் ‘வெள்ளித்திரை’ கதை பிடித்திருந்ததால் அதில் நடிக்க உடனே கால்ஷீட் கொடுத்தேன். இதை மனதில் வைத்துக் கொண்டு பல புதிய இயக்குனர்கள் கேரளாவிற்கே வந்து கதை சொல்கிறார்கள். ஆனால், அவ்வளவு தூரம் அவர்கள் வந்து கதை சொன்னாலும் மனதிற்கு பிடித்த கதைகள் அமையவில்லை. உதட்டை பிதுக்குகிறார் கோபிகா!மெட்டி ஒலி படத்தின் மூலம் கோபிகாவுக்கு மீண்டும் தமிழ் நெஞ்சங்களில் ஒரு சேர் போட்டுக் கொடுத்த திருமுருகன், மறுபடியும் கோபிகாவை தான் இயக்கும் படத்திற்கு ஹீரோயின் ஆக்கவிடலாம் என்று முடிவு செய்தார். இதற்காக அவரிடம் ஒரு கதையும் சொன்னாராம். என்ன விந்தை? ஒரு வருடத்திற்கு கால்ஷீட் இல்லை என்று கையை விரித்து விட்டாராம் கோபி. தன்னுடைய மெட்டி ஒலி சீரியலில் கோபி என்ற பெயரிலேயே நடித்த திருமுருகனுக்கு கோபி(கா) நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், கோபி ‘கா’ விட்டுவிட்டாரே என்ன செய்வது?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கரும்புலிகளின் உடல்கள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது குறித்து விசாரணை
Next post ஈரான் மீது புதிய தடைகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை