செய்யாறில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த வாலிபரை குத்திக்கொலை செய்த நண்பர்கள்!!

Read Time:2 Minute, 34 Second

7a146633-97f9-4cfe-aa6c-12d8b92b8a74_S_secvpfசெய்யாறு டவுன் வெங்கட்ராயன் பேட்டை ஈ.வே.ரா. பெரியார் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் துரைராஜ்(30), சி.டி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

இவருக்கு புவனேஷ்வரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். துரைராஜ் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் துரைராஜ் தனது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த ஆறு என்கிற ஆறுமுகம்(22), ரமேஷ்(24), சேகர்(26) ஆகியோருடன் நேற்றிரவு 11 மணியளவில் அங்குள்ள பெரியகவரை தெரு பிள்ளையார் கோவில் பின்புறம் மது அருந்திக்கொண்டிருந்தார்.

அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ஆறுமுகமும், ரமேஷும் சேர்ந்து துரைராஜை அடித்து உதைத்தனர்.

சண்டையை தடுத்து துரைராஜை காப்பாற்ற முயன்ற சேகரையும் அவர்கள் பீர்பாட்டிலால் தாக்கினர். இதில் சேகருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஆத்திரம் தீராத ஆறுமுகமும், ரமேஷும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் துரைராஜை சராமாரியாக குத்தி சாய்த்தனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துரைராஜ் பரிதாபமாக பலியானார். அவர் இறந்ததை உறுதி செய்த ஆறுமுகமும், ரமேஷும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.

தகவலறிந்து வந்த செய்யாறு டவுன் போலீசார் படுகாயமடைந்த சேகரை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துரைராஜின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலிவுட் கான்களை பார்க்கும் ஆசையில் இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண் கைது!!
Next post டாக்டரால் கற்பழிக்கப்பட்டு, 14 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்துவரும் 24 வார கருவை கலைக்க கோர்ட் ஒப்புதல்!!