வாய்க்குள் பொருட்களை திணித்து 48 உலக சாதனைகளை படைத்த இந்தியர்: வீடியோ இணைப்பு!!

Read Time:3 Minute, 33 Second

7f690faa-8152-4b13-b650-20fb190f434a_S_secvpfமும்பையை சேர்ந்த அறிவியல் ஆசிரியரான தினேஷ் உபாத்யாயா வாய்க்குள் பொருட்களை திணித்து 48 உலக சாதனைகளை படைத்த இந்தியர் என்ற முறையில் நமது நாட்டுக்கு பெருமை சேர்த்து தந்துள்ளார்.

தனது வாய்க்குள் 92 பென்சில்களை நுழைத்துக்கொள்வது, 79 திராட்சைகளை வைத்துக்கொள்வது, 12 மெழுகுவர்த்திகளை வைத்துக்கொள்வது, 6 டேபிள் டென்னிஸ் பால்களை வைத்துக்கொள்வது, ஐந்து கோல்ப் பந்துகளை வைத்துக்கொள்வது, 100 மார்பிள் குண்டுகளை வைத்துக்கொள்வது, 14 டெஸ்ட் டியூப்களை வைத்துக்கொள்வது என இவரது உலக சாதனைகள் நீண்டு கொண்டே வருகின்றன.

இது குறித்து 6 அடி 6 அங்குல உயரம் கொண்ட தினேஷ் கூறுகையில், நாள் தவறாமல் தினமும் பயிற்சி செய்வதன் மூலம் இச்சாதனையை படைக்க முடிந்ததாக கூறினார். தனது ஒரே நோக்கம் அனைத்து வாய் திணிப்பு சாதனைகளையும் முறியடிப்பதுதான் என்று கூறியுள்ள தினேஷ், சமீபத்தில் 1000 உறிஞ்சும் ஸ்ட்ராக்களை அடைத்து உலக சாதனை படைத்தார். அமெரிக்காவை சேர்ந்த டாட் டெபாசியோ, 70 பென்சில்களை வாய்க்குள் திணித்து சாதனை படைத்த நிகழ்ச்சியை கண்டதில் இருந்து, தன்னால் அவரை விட மிகப்பெரிய சாதனையை படைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் கடந்த 2010 முதல் தினேஷ் இம்முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தனது வாயை விரிவுபடுத்துவதற்காக தினந்தோறும், யோகா மற்றும் மூச்சு விடும் பயிற்சியை தினேஷ் செய்து வருகிறார். அதே போல் முகத்தோலில் மசாஜ் செய்து எந்த அளவுக்கு வாயை திறக்க முடியுமோ, அந்த அளவுக்கு வாயை திறக்க முயன்று வருகிறார். அதாவது தனது வாய் ரப்பர் போன்று விரியும் வகையில் தினமும் 10 நிமிட நேரம் தினேஷ் இவ்வாறு முயற்சித்து வருகிறார்.

தனது முதல் உலக சாதனையை படைப்பதற்கு தினேஷுக்கு 4 மாதங்கள் பிடித்தது. நம்பர். 2 சைஸ் கொண்ட பென்சில்கள் 100 எண்ணிக்கையை வாய்க்குள் வைத்து தினேஷ் முதல் சாதனையை படைத்தார். முதலில் தன்னால் 50 பென்சில்களை மட்டுமே வாய்க்குள் திணிக்க முடிந்தது என்று கூறியுள்ள தினேஷ், நாளடைவில் அது 70 ஆக உயர்ந்து பின்னர் 100 ஆக அதிகரித்ததாக தினேஷ் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு சாதனையை படைத்துள்ள தினேஷை இந்தியர் ஒவ்வொருவரும் வாழ்த்தவேண்டும். ஆகையால் நாமும் வாழ்த்துவோமே…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பஞ்சாபில் பறிமுதல்!!
Next post பாலியல் பலாத்கார வழக்கில் சமரசம் செய்ய சொல்வது மிகப்பெரிய தவறு: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!!