ஆபாசமாக சித்தரிப்பதா?: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்!!

Read Time:2 Minute, 46 Second

f2dfd602-e511-46b5-9642-cfc50ed81f7a_S_secvpfதெலுங்கானா மாநில அரசுத்துறையில் பணியாற்றும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்மிதா சபர்வால் இவர் முதல்–மந்திரி சந்திர சேகரராவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண் அதிகாரி ஸ்மிதா சபர்வால் தனது அழகை வைத்து பதவி உயர்வு பெறுவதாக பிரபல ஆங்கில வார இதழ், கிசு கிசு வெளியிட்டது. அதிகாரியின் பெயரை குறிப்பிடாமல் அவரது அழகு, அவர் உடை அணியும் விதம், பணியில் பதவி உயர்வுக்கு மேல் பதவி உயர்வு வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் பிரில் வைத்த சட்டை போட்டு வந்து அனைவரையும் அசத்திவிட்டார் என்று தெரிவித்துள்ளதுடன் அந்த நிகழ்ச்சி தொடர்பாக கேலிச்சித்திரமும் வெளியிட்டுள்ளது. இது தெலுங்கானா மாநில அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை பார்த்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்மிதா ஆவேசம் அடைந்தார். என்னை ஆபாசமாக சித்தரித்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். என்னைப் பற்றி தவறான கண்ணோட்டத்தில் கீழ்த்தரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே 15 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெண் அதிகாரி ஸ்மிதா கூறியுள்ளார்.

மக்களின் அதிகாரி என்று பெயர் எடுத்த ஸ்மிதா மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். 1977–ம் ஆண்டு பிறந்தார். 2001–ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் 4–வதாக தேர்ச்சி பெற்றார்.

ஒருங்கிணைந்த ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனபள்ளியில் துணை கலெக்டராக பொறுப்பேற்றார். பல ஆண்டுகள் ஆந்திராவில் பணியாற்றிய பிறகு அவர் கடந்த 2011–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கரீம்நகர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

2014–ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தெலுங்கானா முதல்–மந்திரி சந்திர சேகரராவின் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் பலாத்கார வழக்கில் சமரசம் செய்ய சொல்வது மிகப்பெரிய தவறு: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!!
Next post ஹோட்டல் அலமாரிக்குள்ளிருந்து தாயும் மகளும் பிணமாய் மீட்கப்பட்ட கொடூரம்!!