மும்பையில் மீண்டும் ஒரு சம்பவம்: குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பெண் பேஷன் டிசைனர்!!

Read Time:3 Minute, 4 Second

8781bf12-cd65-4c69-9792-47464ec65357_S_secvpf5மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன் விலையுயர்ந்த ஆடி காரில் வந்த பெண்மணி ஒருவர் அளவுக்குமீறிய போதைக்காரணமாக விபத்தை ஏற்படுத்தினார். விசாரணையில் அந்த பெண்மணி ஒரு வக்கீல் என தெரியவந்தது. இந்த சம்பவம் முடிந்து சில நாட்களுக்குள் இதேபோல் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

மும்பை புறநகரான பந்த்ரா பகுதியில் நிதி பரேக் (பேஷன் டிசைனர்) என்ற பெண் நேற்றுமுன்தினம் அதிகாலை செவ்ரோலெட் என்ற விலையுயர்ந்த காரில் வந்து கொண்டிருந்தார். அவர் ஓட்டிய வந்த கார் கார்டர் சாலை அருகே வந்தபோது சாலையோரம் இருந்த ஒரு டீக்கடை மீது மோதியது. அத்துடன் கார் நிற்காமல் ஒரு ஆட்டோ ரிக்‌ஷா மீது மோதி, பின்னர் ஒரு காரின் மீது இடித்து நின்றது.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த கார் காவல் நிலைய போலீசார் அந்த பெண்ணை அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அப்பெண் போதையில் இருந்தது தெரிய வந்தது. இரவு நேரம் என்பதால் அந்த பெண்ணை வீட்டுக்கு அனுப்பிய போலீசார் காலையில் அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து கார் போலீஸ் நிலைய சீனியர் இன்ஸ்பெக்டர் கூறியதாவது-

அதிகாலை நேரம் 2.45 மணிக்கு சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்றோம். அந்த இடத்தில் மக்கள் திரண்டதால் நிதி காரை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். நாங்கள் சாவி தயாரிப்பாளர் மற்றும் பெண் போலீசார் மூலம் அவரை காரில் இருந்து மீட்டோம்.

அப்போது அவர் போதையில் இருந்தது தெரிய வந்தது. சம்பவம் நடைபெற்றது அதிகாலை என்பதால் அவரை உடனே கைது செய்யவில்லை. வீட்டிற்கு அனுப்பி விட்டோம். பிறகு காலையில் அவரை கைது செய்தோம். பின்னர் அவரை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். காயம் அடைந்த நபரை உள்ளூர் மக்கள் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற நாங்கள் இரண்டு கார் மற்றும் ஆட்ரோ ரிக்‌ஷாவை கைப்பற்றி உள்ளோம். கார் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷாவின் உரிமையாளர்கள் புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்வோம்.

இவ்வாறு கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமான பயணிகளை இறக்கி விட்டதற்கு மன்னிப்பு கோரிய கிரண் ரிஜிஜூ!!
Next post மனைவி மற்றும் குழந்தையை கோடரியால் வெட்டி சாய்த்தவருக்கு மரண தண்டனை!!