குஜராத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து சாவு!!

Read Time:1 Minute, 35 Second

1eb77894-859d-4a9b-a160-fc842e122e94_S_secvpfகுஜராத் மாநிலம் போதட் நகரில் இன்று இரண்டு குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

போதட் நகரின் சக்திபாரா பகுதியைச் சேர்ந்த பினாபென் கராஜியா (வயது 28) என்ற இளம்பெண் இன்று தன் மீதும், குழந்தைகள் சுமித்(4), ஹர்திக் (1) ஆகியோர் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். தீயில் கருகி அவர்கள் அலறித்துடித்தனர். இதுபற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, தீயில் கருகிய மூவரும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர்கள் இறந்துவிட்டனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளைக்கொன்று தற்கொலை செய்த அந்தப் பெண் தற்கொலைக் குறிப்பு எதுவும் எழுதி வைக்காததால் சாவுக்கான உண்மையான காரணம் தெரியவில்லை. அதேசமயம், அவரது கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆற்காடு அருகே மயக்க ஸ்பிரே அடித்து பெண்ணிடம் நகை பறிப்பு!!
Next post மாறியது பேஸ்புக் LOGO… புதியது இதோ…!!