ஜம்முவில் இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி அட்டூழியம்: ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது!!
ஜம்முவில் பொதுமக்கள் முன்னிலையில் இளம்பெண் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்திய அதிர்ச்சி காட்சிகள் வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவத்தில் ராணுவ வீரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வாட்ஸ் அப்பில் வெளியான காட்சியில், இளம்பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து வருகிறார். அப்போது வாகனத்தை தடுத்து நிறுத்திய 5 பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்துகின்றனர்.
அப்போது அங்கிருந்த ஒரு நபர் இக்காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்து வாட்ஸ் அப்பில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
உதம்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற இச்சம்பவம் வாட்ஸ் அப் மூலம் பொதுமக்கள் மத்தியில் வேகமாக பரவியது. இது குறித்து அறிந்த காவல்துறையி்னர், வீடியோவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ராணுவ வீரர் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மக்களை காப்பாற்ற வேண்டிய ராணுவ வீரர் ஒருவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating