தனது ஆபாச படம் குறித்து விளக்கம் சொல்லும் நடிகை…!!

Read Time:2 Minute, 13 Second

vasundharaவட்டாரம், ஜெயம்கொண்டான், பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களில் வசுந்தரா நடித்துள்ளார். சமீபத்தில் வசுந்தராவின் ஆபாச படங்கள் இணையதளங்களிலும், வாட்ஸ்அப்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

வசுந்தரா ஆடை இல்லாமல் இருப்பது போன்றும், படுக்கை அறையில் ஒரு ஆணுடன் நெருக்கமாக இருப்பது போன்றும் அப்படங்கள் இருந்தது. அது வசுந்தராதானா அல்லது மார்பிங் செய்யப்பட்டதா என்று உறுதியாக தெரியவில்லை.

இந்த ஆபாச படத்தை பார்த்து வசுந்தரா அதிர்ச்சியானார். திடீரென அவர் மாயமாகி விட்டார். மொபைல் போனையும் ‘சுவிட்ச்ஆப்’ செய்து விட்டார். இதனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

பல மாதங்கள் இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். ’புத்தர் ஏசு காந்தி’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இதுகுறித்து வசுந்தரா கூறியதாவது:– எனக்கு நேர்ந்தது போன்ற சம்பவம் நிறைய பெண்கள் வாழ்க்கையில் நடந்துள்ளது. இதுபோன்ற படங்களை நிறையபேருக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். தங்கள் வீடுகளிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும். நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை.

தற்போது நடித்துக் கொண்டு இருக்கும் படம் என் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தும். தமிழில் தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன். இவ்வாறு வசுந்தரா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்பை அருகே திருமண ஆசைகாட்டி பெண் கற்பழிப்பு: வாலிபர் கைது!!
Next post ஒபாமாவின் மகள் செய்யும் தொழில் என்ன தெரியுமா..?