சிறுமிகள் பலாத்காரம்: 3 முதியவர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் – தூத்துக்குடி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!

Read Time:2 Minute, 14 Second

f254d55a-5d6b-402a-aa9e-ceee271454d0_S_secvpfதூத்துக்குடி அருகே தாளமுத்து நகரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த 2 சிறுமிகள் அதிக அளவில் பணம் வைத்து இருந்தனர். இதனை பார்த்த அந்த சிறுமிகளின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் சிறுமிகளிடம் எப்படி பணம் கிடைத்தது என்று விசாரித்தனர்.

அப்போது பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த சிறுமிகளை சமீர்வியாஸ் நகரை சேர்ந்த மூக்கையா (வயது 62) என்பவர் தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஆபாச படங்களை சி.டி.யில் போட்டு காண்பித்து உள்ளார்.

பின்னர் தனது நண்பர்கள் தாளமுத்துநகர் ஆனந்தம் நகரை சேர்ந்த பால்ராஜ் (65), கிழக்கு காமராஜர்நகரை சேர்ந்த சர்க்கரை (65) ஆகியோருடன் சேர்ந்து, 2 சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியில் கூறாமல் இருப்பதற்காக சிறுமிகளுக்கு பணம் கொடுத்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் கடந்த 2013ம் ஆண்டு நடந்தது.

இது குறித்து சிறுமிகளின் பெற்றோர் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகள் விசாரணை தூத்துக்குடி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புளோரா, குற்றம் சாட்டப்பட்ட மூக்கையா, பால்ராஜ், சர்க்கரை ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சந்திரசேகர் ஆஜர் ஆனார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடத்தையில் சந்தேகம்: இளம்பெண் தலையை துண்டித்து கொலை – கணவர் போலீசில் சரண்!!
Next post இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்..!!!