காத்திருக்கும் கணவர்… பாசத்துக்காக ஏங்கும் குழந்தை: பவித்ரா மனம் மாறுவாரா?

Read Time:4 Minute, 48 Second

754f384a-5a19-4fc7-8724-bb5007bac2c8_S_secvpfஆம்பூர் கலவர பின்னணியில் இருந்த பவித்ரா, தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் அம்பத்தூரில் மீட்கப்பட்டார்.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், கணவருடன் செல்ல எனக்கு விருப்பம் இல்லை. விவாகரத்து வேண்டும் என்று அதிரடியாக கேட்டார்.

இதையடுத்து பவித்ராவுக்கு அறிவுரை கூறிய நீதிபதிகள் விவாகரத்து என்ன பெட்டிக்கடையில் கிடைக்கும் பொருளா? என்று கேள்வி எழுப்பினர். கணவருடன் செல்லாவிட்டால் பெற்றோருடன் செல். கணவருடன் சேர்ந்து வாழ முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறினர். ஆனால் பவித்ரா பெற்றோருடனும் செல்ல மறுத்ததால் சென்னையில் உள்ள காப்பகத்தில் அவர் தங்க வைக்கப்பட்டார்.

மகளை பார்த்தால் எப்படியும் பவித்ரா மனம் மாறி விடுவார் என்ற நம்பிக்கையில் கணவர் பழனி மகள் இச்சிதாவுடன் ஐகோர்ட்டுக்கு வந்திருந்தார்.

ஆனால் பவித்ரா எதைப் பற்றியும் கவலைப்படாமலேயே இருந்தார். குழந்தையை தொட்டுக்கூட பார்க்காத பவித்ரா, கணவரை கண்டு கொள்ளாமலேயே காப்பகத்துக்கு சென்று விட்டார்.

வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு பவித்ரா வீட்டை விட்டு வெளியில் சென்று திரும்பி வந்திருந்தாலும், கணவர் பழனி அவரை ஏற்றுக்கொள்வதற்கு தயாராகவே இருக்கிறார். இதனால்தான் அவர் ஐகோர்ட்டுக்கு குழந்தையையும் அழைத்து வந்திருந்தார்.

பவித்ராவின் குழந்தை இச்சிதாவும் தாய் பாசத்துக்காக ஏங்கி தவிக்கிறாள். அம்மா எப்போது வருவார்? அம்மா எப்போது வருவார்? என்று பழனியிடம் கேட்டபடியே உள்ளார்.

இக்குழந்தையை பார்ப்பதற்குத்தான் மிகவும் பாவமாக இருப்பதாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கூறுகிறார்கள். திருமணமாகி குழந்தை பெற்ற நிலையில் கணவர் பழனியையும், குழந்தையையும் பவித்ரா வெறுத்து ஒதுக்குவதற்கு காரணம் என்ன என்பது பார்ப்போம்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த ரவிச்சந்திரன்–செல்வி தம்பதிகளின் மகளான பவித்ராவுக்கும், அவரது மாமா மகனான பழனிக்கும் 7 ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. பழனிக்கு பவித்ராவை விட 10 வயது அதிகம். இதனால் பவித்ராவின் தோழிகள் எப்படி உன்னை விட மூத்தவருடன் குடும்பம் நடத்துகிறாய் என்று கூறியதுடன், 2 பேரையும் ஒப்பிட்டு பேசியும் உசுப்பேற்றி விட்டுள்ளனர்.

இந்த நேரத்தில்தான் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்கு சேர்ந்த பவித்ராவுக்கு ஷகில் அகமதுவுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த புது சுகமே, கணவர் பழனி மற்றும் குழந்தையின் மீது பவித்ரா வெறுப்படைய காரணமாக அமைந்துள்ளது.

தற்போது காப்பகத்தில் தங்கி இருக்கும் பவித்ரா, குழந்தையின் நலன் கருதி கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

20–ந்தேதி வரை காப்பகத்தில் இருக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் இன்னும் 10 நாட்களுக்கு மேல் அவர் காப்பகத்திலேயே தங்கி இருப்பார். அதற்குள் பவித்ரா மனம் மாறி தன்னுடன் வந்து சேர்ந்து விடுவார் என்று பழனி மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

தாய் பாசத்துக்காக குழந்தை இச்சிதாவும் தவித்து வருகிறது. பழனியின் நம்பிக்கை பலிக்குமா? குழந்தை இச்சிதாவின் ஏக்கம் திரும்புமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இடைக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு பிரசவம்: நஷ்டஈடு கேட்டு கலெக்டரிடம் மனு!!
Next post திண்டுக்கல் அருகே பூச்சூடி பொட்டு வைத்த விதவை பெண்கள்!!