அப்துல் கலாமின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து சர்ச்சையில் சிக்கிய மந்திரி!!

Read Time:1 Minute, 53 Second

092355bf-6cc3-4482-999b-c0b983390e7a_S_secvpfமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் புகைப்படத்துக்கு ஜார்க்கண்டை சேர்ந்த கல்வி மந்திரி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கல்வி மந்திரியாக பதவி வகிப்பவர் நீரா யாதவ். அண்மையில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற புதிய வகுப்பறை திறக்கும் நிகழ்ச்சியில் அவர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது நீரா யாதவ், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து பொட்டு வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்து கலாச்சாரப்படி, இறந்தவர்களுக்கு மட்டுமே இதுபோன்ற மரியாதை செலுத்தப்பட்டு வரும் நிலையில், நீரா யாதவின் இச்செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தன் மீது எழுந்த சர்ச்சைக்கு நீரா யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.”சில பள்ளிகளில் பெரிய தலைவர்களின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். அந்த முறையிலேயே அப்துல் கலாமின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். அப்துல் கலாம் மிகச் சிறந்த விஞ்ஞானி. அவரது புகைப்படத்துக்கு மாலை அணிவித்து கவுரவித்ததில் எந்தவித தவறும் இல்லை” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கால் டாக்ஸி ஓட்டுநர் கைது!!
Next post சொத்தை பிரித்து கேட்டு தொல்லை: மகனை வெட்டி கொன்ற தந்தை