சிலம்பாட்டத்தில் சினேகா?

Read Time:1 Minute, 43 Second

sneha123.jpgநாயகி விஷயத்தில் சிம்புவின் ராசி, ரொம்ப குழப்பமானது. யானா குப்தா, மந்த்ரா பேடி என ஒருபக்கம் குளிரடிப்பார்கள். லேகா வாஷிங்டன் போன்று இன்னொரு பக்கம் திகிலடிப்பார்கள். காளை’, ‘கெட்டவன்’ படங்களுக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படம் சிலம்பாட்டம். ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்கும் முதல்படம். படத்தயாரிப்புக்கு சிறிது இடைவெளி விட்ட லஷ்மி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரிக்கிறது. சிலம்பாட்டத்தில் சிம்புக்கு இரண்டு ஜோடிகள். அதில் ஒருவர் சினேகா என்றார் தயாரிப்பாளர் கே.முரளிதரன். சினேகாவிடம் கேட்டால் பட்டும் படாமலும் பதில் சொல்கிறார். தெலுங்கில் மூன்று படங்கள். தமிழில் ‘அறுவடை’, ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘இன்பா’, ‘பாண்டி’ என நான்கு. மொத்தமாக ஏழுபடங்களில் இரவு பகலாக நடித்துக் கொண்டிருக்கிறார் சினேகா. கால்ஷீட் இல்லாததால் ‘காளை’ யில் நடிக்க முடியாமல் போனது. சிலம்பாட்டத்தில் நடிக்க ஆசைதான் கால்ஷீட்தான்….” என முடிக்காமல் இழுக்கிறார். என்றாலும் நாயகி சினேகாதான் என தயாரிப்பாளர் உறுதியாக இருப்பதால் சினேகா சிலம்பாடுவார் என்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கோவில் நகை திருடர்களை காட்டி கொடுத்த கேமரா
Next post இந்திய வம்சாவளி பெண் மீது இன பாகுபாடு : அமெரிக்க நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு