உத்தரபிரதேசத்தில் தலைமை காவலரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது!!

Read Time:1 Minute, 24 Second

09b818e3-0913-4eb8-82e5-6e02a2f6e2b7_S_secvpfஉத்தர பிரதேசத்தில் தலைமை காவலரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் எடா மாவட்டத்தில் வழக்கு விசாரணைக்காக துணை ஆய்வாளரும் தலைமைக் காவலரும் அகிலேஷ் என்பவரது வீட்டுக் சென்றுள்ளனர். அப்போது வீட்டுக்குள் நுழைய முயன்ற தலைமைக் காவலரை அகிலேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் துவைத்து எடுத்தனர்.

வலி பொறுக்க முடியாத தலைமைக் காவலர் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்திய அஜய் மற்றும் விஜய் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தலைமறைவான அகிலேஷை போலீசார் தேடிவருகின்றனர். தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அகிலேஷின் குடும்பத்தினர் 5 பேர் மீதும் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!
Next post பிடித்தமான பாட்டை போடாததால் மணமகனின் தந்தை சுட்டுக் கொலை: சோகத்தில் முடிந்த திருமண விழா!!