நாமக்கல் அருகே கிணற்றில் கார் பாய்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. மகள்–பேத்தி பலி!!

Read Time:4 Minute, 20 Second

416a8061-daa4-43da-9c36-3684bcab2a44_S_secvpfதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 55). இவர் சேலம் இரும்பாலையில் சீனியர் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பூங்குழலி (48). இவர்களது மகள்கள் மங்கையர்கரசி (27), அங்கையர்கன்னி (25).

இவர்கள் 2 பேரும் சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.

பாண்டியன் தனது மனைவியுடன் சேலம் இரும்பாலை மோகன் நகரில் வசித்து வருகிறார். இவர் தங்களது 2 மகள்களுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார். ஆனால் ஜாதகத்தில் தோஷம் உள்ளதாகவும் அந்த தோஷத்தை கழித்தால் நல்லது நடக்கும் என்றும் ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார்.

இதையடுத்து பாண்டியன் நேற்று காரில் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் ஒரத்தநாட்டில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் அவர்கள் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை பாண்டியன் ஓட்டி வந்தார்.

நேற்று நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் நாமக்கல் அருகே உள்ள என்.புதுப்பட்டி பக்கம் கார் வந்து கொண்டிருந்தது. திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த தண்ணீர் இல்லாத சுமார் 80 அடி ஆழம் கொண்ட பாழடைந்த கிணற்றுக்குள் தலை குப்புற கவிழ்ந்தது.

இதில் 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி மரண ஒலி எழுப்பினார்கள். ஆனால் காருக்குள்ளேயே பூங்குழலியும் மங்கையர்கரசியும் பரிதாபமாக இறந்தனர்.

விபத்து நடந்தபோது காருக்கு பின்னால் ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அதை ஓட்டி வந்த டிரைவர் கார் கிணற்றுக்குள் விழுந்ததை பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு அங்கு ஓடிச் சென்று பார்த்தார். பின்னர் அவர் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி கார் கண்ணாடியை உடைத்து அவர்களை மீட்க முயன்றார். இதுகுறித்து அவர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து மோகனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாண்டியன் மற்றும் அங்கையர்கன்னி ஆகியோரை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் இறந்த பூங்குழலி, மங்கையர்கரசி ஆகியோர் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான பூங்குழலி ஒரத்தநாடு தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தைலப்பனின் மகள் ஆவார்.

கிணற்றில் கார் பாய்ந்த விபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகள் – பேத்தி பலியான சம்பவம் நாமக்கல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்து பற்றி அறிந்ததும் ஒரத்தநாட்டில் இருந்து உறவினர்கள் நாமக்கல்லுக்கு விரைந்து வந்தனர். அவர்கள் இறந்தவர்களின் பிணத்தை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஸ் டிரைவர் கொலை: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் காதலன் மூலம் தீர்த்துக்கட்டினேன்- மனைவி வாக்குமூலம்!!
Next post நடிகைகளின் படங்கள் பல!!