சுசிலுக்கு எதிராக FCID செல்கிறார் கெமுனு!!

Read Time:1 Minute, 35 Second

1233662791524491149gemunuwije2முன்னாள் கனியவளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக பொலிஸ் விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு செல்லவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

சுசில் பிரேமஜயந்த அமைச்சராக இருந்த போது இறக்குமதி செய்த தரக்குறைவான எரிபொருள் காரணமாக அப்போது பல பஸ்கள் பழுதடைந்ததாகவும் அதனால் தமக்கு 22 லட்சத்து மூவாயிரத்து 64 ரூபா செலவு செய்ய ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த நட்டத்தை சரிசெய்து கொள்ள அப்போது அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதன்பின் தமது கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றை 2012-08-14 அன்று வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையால் அதனை விசாரணை செய்து நியாயம் வழங்குமாறு பொலிஸ் விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக கொழும்பில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாஜூடீனின் மரணம் விபத்தல்ல கொலை – நீதிமன்றத்தில் தெரிவிப்பு!!
Next post ஓற்றை ஆட்சிக்குள் இனப் பிரச்சினையை தீர்க்க முடியாது!!