ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழுவை கூட்ட விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!!

Read Time:1 Minute, 58 Second

1717688253slfpஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி இன்றி மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மேலும் நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கட்சித் தலைவரின் அனுமதி இன்றி மத்திய குழுவை கூட்ட அனுமதி அளிக்க கூடாது என கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பிரசன்ன சோலாங்காராச்சி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்றைய தினம்வரை தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

மனு இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஓகஸ்ட் 7ம் திகதி எதிர்ப்பு இருப்பின் சமர்பிக்குமாறு மனுவின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிற்கு நீதிமன்றம் பணித்தது.

அதுவரை பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை நீடிக்கப்படுவதாக கொழும்பு மாவட்ட நீதிபதி ஹர்ச சேதுங்க அறிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி யாப்பின் பிரகாரம் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டும் அதிகாரம் கட்சியின் தலைவருக்கு உண்டு என பிரசன்ன சோலங்காராச்சி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவி கழுத்தை நெரித்து படுகொலை: கணவர் கைது!!
Next post இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி பலி!!