இரு விபத்துக்களில் இருவர் பலி!!

Read Time:1 Minute, 48 Second

523099538Untitled-1ஹபரணை – தம்புள்ளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.

ஹபரணை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று பாதையில் சென்று கொண்டிருந்த பெண்கள் இருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இரண்டு பெண்களையும் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் ஹபரணை – தம்புள்ளை வீதியில் வசிக்கக் கூடிய 49 வயதுடைய பெண் ஒருவரே.

இதுதவிர கந்தானை நாகொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீர் கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று மற்றொரு பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நாவின்னை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 171 பேர் கைது!!
Next post ஐ.நா ஆவணம் கசிவு – பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? சனல் 4 கேள்வி!!