21 கரும்புலிகளை பலி கொடுத்தும் சிறீலங்கா வன்படையின் தாக்குதலில் இருந்து தமிழ்ச்செல்வனைக் காப்பாற்ற முடியாத பிரபாகரன்!

Read Time:3 Minute, 37 Second

lttepirabagroup.jpgபுலிகள் கூறுவது போல் தமிழ்ச்செல்வன் சிறீலங்கா வான்படையால் தான் கொல்லப்பட்டார் என்பது உண்மையானால் புலிகளின் அனுராதபுரத் தாக்குதல் புலிகளுக்கு எந்த வெற்றியையும் கொடுத்திருக்கவில்லை என்பதே உண்மை! உங்களுக்கு எல்லாளனை காட்டப் போகின்றேன் என்று கூறி 21கரும் புலிகளை அனுப்பி அனுராதபுரத்தில் பலி கொடுத்தார் பிரபாகரன். சிங்களத்தின் வான்படைக்கு பேரிழப்பு என்று செய்தி போட்டு….. எத்தனை விமானங்களை அழிதொழித்தோம் என்று கணக்கு காட்டி…. வீரம் பேசினார்கள் புலிகள்… இனி சிறீலங்கா வான்படை குண்டு வீசுமா?…. வந்து பார்க்கட்டும் தமிழீழத்திற்குள் என்று தான் இருக்கும் பங்கரை மட்டும் தமிழீழம் என்று கற்பனைக் கோட்டை கட்டிய பிரபாகரன் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு உசார் ஏற்றி விட்டார். கிழக்கையும் இழந்து, மன்னாரின் சில பகுதிகளையும் இழந்து வரும் புலிகள் தமிழ் மக்களுக்கு அனுராதபுரத் தாக்குதலை நடத்தி தாம் காட்டி பலமுடன் இருப்பதாக பூச்சாண்டி காட்டினார்கள். நவம்பர்த் தலைவர் பிரபாகரனை அவரது வருடாந்த உரைக்கு முன் இனியும் ஒரு தடவை தனது உறுப்பினர்களை பலிகொடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு சிறிலங்கா அரசு தள்ளி விட்டிருக்கின்றது. இராணுவ வெற்றிகளால் எதுவும் நடக்கப் போவதில்லை. உயிர்ப்பலிதான் மிச்சம். இது எல்லோருக்கும் பொதுவான பாடம். இனி புலிப்பினாமிகள் இன்னுமொரு பலிகொடுப்புக்காக காத்திருக்க வேண்டும்.

தங்களது பிள்ளைகளை அல்ல… அடுத்தவன் பிள்ளைகளை பலிகொடுத்துத் தான் பிரபாகரன் தனது பிறந்தநாளை கொண்டாடப் போகின்றார். அடுத்த பலி கொடுப்பு யார்? எப்போது?…எங்கே?… பலிகொடுப்பு நடந்தால் தான் புலம் பெயர்ந்தவர்களுக்கும் வீரம் கொப்பளிக்கும் வெறும்வாயால் எப்படி வீரம் பேச முடியும்?

முதலில் தமிழ்ச்செல்வனின் பிணத்தை வைத்து எல்லோரும் கறுப்பு கொடி கட்டி புலம் பெயர்ந்த தமிழர்களின் பணத்தை சூறையாடுவதற்கான அனுதாப அலையை ஏற்படுத்துவது தான் பிரபாகரனின் திட்டம். பாவம் தமிழ்ச்செல்வனும், அவனது சகாக்களும். புலம் பெயர்ந்தவர்களின் பணத்தை சூறையாடுவதற்காக தம்முயிர்களை மாய்த்தனர் இவர்கள்.

சிரித்துக்கொண்டு பொய் சொன்னவன்………
சிரித்துக்கொண்டே போய்ச் சேர்ந்தான்!!!!!!!!!

ஓருவனின் மரணத்தை கண்டு யாரும் சிரிக்க முடியாது. இதை தமிழ்ச்செல்வன் முதலில் விளங்கியிருக்க வேண்டும்.

–எல்லாளன். (ஈழநாச இணையம்)

lttepirabagroup.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்திய அணியை வீழ்த்த யுவராஜ் சிங்கை குறி வைப்போம்: பாக். கேப்டன் சோயிப் மாலிக் பேட்டி
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…