வேட்பாளர்களின் நிதி அறிக்கைகள் ஆகஸ்ட் 05ம் திகதிக்கு முன்னர் சம்ர்பிக்கப்பட வேண்டும்!!
இந்தமுறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தும் நிதி அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 05 திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்பிக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
ஜூலை மாதம் 31ம் திகதி போயா விடுமுறை தினம் என்பதனாலும், அதனைத் தொடர்ந்து வரும் 1ம் 2ம் திகதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என்பதனாலும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தும் நிதி அறிக்கையை தபால் மூலம் அனுப்பும் வேட்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் நிரந்த பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது வேட்பாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜூலை மாதம் 31ம் திகதி இறுதித் தினமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அநேகமான வேட்பாளர்கள் தமது நிதி அறிக்கைகளை சமர்பித்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இந்தமுறை தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிக்காட்டும் நிதி அறிக்கையை சமர்பிக்காத வேட்பாளர்களுக்கு வேட்பாளர்அடையாள அட்டைகள் வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்படுகின்றது.
தமது சொத்து விபரங்களை சமர்பிக்கும் வேட்பாளர்களுக்கு மட்டும் இந்த வேட்பாளர் அடையாள அட்டையை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating