கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வேலை நிறுத்தப் போராட்டம்!!

Read Time:1 Minute, 36 Second

1711320813Hospitalநிரந்தர மற்றும் இடைக்கால வைத்திய தொழிற்சங்க உறுப்பினர்களின் ஒன்றிணைந்த சபை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

தமது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமையின் காரணமாக இன்று காலை 8 மணி முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சமன் ஜயசேகர தெரிவித்தார்.

நிரந்தர மற்றும் இடைக்கால வைத்திய தொழிற்சங்க உறுப்பினர்கள் 14 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு 4 மாதங்களுக்கு முன்னர் சுகாதார அமைச்சருடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் உரிய அதிகாரிகளினால் இதுவரை நடைமுறைப்படுத்தாமையே வேலை நிறுத்தத்திற்கான காரணம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய தினத்திற்குள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் நாளைய தினம் மற்றைய வைத்தியசாலைகளிலும் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று சமன் ஜயசேகர தெரிவித்தார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலையக மக்களுக்கான காணியுரிமையை நிலைநாட்ட சட்ட அணுகுமுறை அவசியம்!!
Next post ஆனந்த சரத் குமாரவிற்கு பிணை வழங்க நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!!