வைத்தியத்துறை வேலை நிறுத்தம் நிறைவு ரயில்துறை வேலை நிறுத்தம் ஆரம்பம்!!!
சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
ஓகஸ்ட 2ம் திகதி நள்ளிரவு தொடக்கம் இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜானக பெனாண்டோ தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலை நிரந்தர மற்றும் இடைக்கால வைத்திய தொழிற்சங்க உறுப்பினர்களின் ஒன்றிணைந்த சபை நேற்று காலை 8 மணியளவில் ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம் இன்று காலை 8 மணிக்கு நிறைவுக்கு வந்துள்ளது.
நேற்று மாலை சுகாதார அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் வேலை நிறுத்தத்தை கைவிட்டுள்ளதாக நிரந்தர மற்றும் இடைக்கால வைத்திய தொழிற்சங்க உறுப்பினர்களின் ஒன்றிணைந்த சபையின் ஏற்பாட்டாளர் சமன் ஜயசேகர தெரிவித்தார்.
Average Rating