திருச்சியில் தங்கியிருந்து தொடர் கைவரிசை: சென்னை வாலிபர்கள் கைது!!

Read Time:7 Minute, 18 Second

748e0db6-1bdc-4fd5-8a63-d3c19b53d73a_S_secvpfதிருச்சி மாவட்டம் கொள்ளிடம் டோல்கேட் மாருதி நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 55). இவர் இருங்களூரில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் மேலாளராக பணிபுரிகிறார்.

ராமமூர்த்தி கடந்த 13.4.2015 அன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றிருந்தார்.

மறுநாள் திரும்பி வந்த பார்த்தபோது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. வீட் டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 45 பவுன் எடை கொண்ட மோதிரம், சங்கிலி, வளையல் உள்ளிட்ட 16 வகையான ஆபரணங்களை காணவில்லை. ராமமூர்த்தியின் வீடு பூட்டப்பட்டிருந்ததை பயன்படுத்தி கொள்ளையர்கள் அவரது வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ராமமூர்த்தி கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார்.

இந்த கொள்ளையில் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து கைது செய்யுமாறு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி உத்தரவிட்டார். இதனையடுத்து கொள்ளைக் கும்பலை பிடிக்க சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் மேற்பார்வையில் சமயபுரம் இன்ஸ்பெக்டர் மனோகர் மற்றும் கொள்ளிடம் போலீசார் கொள்ளிடம் டோல்கேட்டில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் சந்தேகத்துக்கிடமான வகையில் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் சமயபுரம் போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் சென்னை ஓட்டேரி தேமத்தம்மன் காலனியைச் சேர்ந்ததிருச்சி மாவட்டம் கொள்ளிடம் டோல்கேட் மாருதி நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 55). இவர் இருங்களூரில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் மேலாளராக பணிபுரிகிறார்.

ராமமூர்த்தி கடந்த 13.4.2015 அன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றிருந்தார்.

மறுநாள் திரும்பி வந்த பார்த்தபோது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. வீட் டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 45 பவுன் எடை கொண்ட மோதிரம், சங்கிலி, வளையல் உள்ளிட்ட 16 வகையான ஆபரணங்களை காணவில்லை. ராமமூர்த்தியின் வீடு பூட்டப்பட்டிருந்ததை பயன்படுத்தி கொள்ளையர்கள் அவரது வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ராமமூர்த்தி கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார்.

இந்த கொள்ளையில் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து கைது செய்யுமாறு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி உத்தரவிட்டார். இதனையடுத்து கொள்ளைக் கும்பலை பிடிக்க சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் மேற்பார்வையில் சமயபுரம் இன்ஸ்பெக்டர் மனோகர் மற்றும் கொள்ளிடம் போலீசார் கொள்ளிடம் டோல்கேட்டில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் சந்தேகத்துக்கிடமான வகையில் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் சமயபுரம் போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் சென்னை ஓட்டேரி தேமத்தம்மன் காலனியைச் சேர்ந்த சிட்டி பாபு மகன் ஆனந்தன் (39), சென்னை நீலாங்கரை குப்பம் தெற்குத் தெருவைச் சேர்ந்த பிச்சை மகன் மூக்குத்தி குப்பன் என்றும் அவர்கள் டோல்கேட் மாருதி நகர் ராமமூர்த்தியின் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் என்றும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் திருச்சி வரகனேரி தோப்புத் தெருவில் தங்கியிருந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 42 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.சிட்டி பாபு மகன் ஆனந்தன் (39), சென்னை நீலாங்கரை குப்பம் தெற்குத் தெருவைச் சேர்ந்த பிச்சை மகன் மூக்குத்தி குப்பன் என்றும் அவர்கள் டோல்கேட் மாருதி நகர் ராமமூர்த்தியின் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் என்றும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் திருச்சி வரகனேரி தோப்புத் தெருவில் தங்கியிருந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 42 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருந்தாத டெல்லி: தாய்க்கு உதவியாக இருந்த ஆப்கானிஸ்தான் பெண்ணை கற்பழிக்க முயன்ற ஆஸ்பத்திரி ஊழியர் கைது!!
Next post நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது!!