அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் கூட்டத்தில் குழப்ப நிலை!!

Read Time:2 Minute, 32 Second

227348370Naveenகாமினி திஸாநாயக்க மன்றத்தினால், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நிகழ்வு ஹட்டன் – டிக்கோயா நகர மண்டபத்தில் இன்று (08.08.2015) இடம்பெற்றுக் கொண்டிருந்த போது மண்டபத்திற்குள் சென்ற தேர்தல் அதிகாரிகள் இந்தக்கூட்டம் தேர்தல் சட்டத்திற்கு முரணானது எனவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இந்த கூட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.

எனினும் இது அரசியல் கூட்டம் அல்ல என தெரிவித்துள்ள அமைச்சர், காமினி திஸாநாயக்க மன்றத்தின் தலைவர் என்ற முறையில் தான் தேர்தலுக்கு முன்னர் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தாக குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் கூட்டத்தில் அமைச்சர் ஆற்றிய உரை தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் நவீன் திஸாநாயக்க,

உண்மையான நல்லாட்சிக் காரணமாவே வேட்பாளர்களிடம் கடந்த காலங்களில் காணப்பட்ட மோதல் நிலை நிலைமை தற்போது இல்லை.

அரசியல் களம் தற்போது சூடிப்பிடித்திருந்தாலும் உண்மையான நல்லாட்சியால், இந்த மோதல் நிலைமை ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் தற்போது ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சிக்கும் ஒரே சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் வன்முறையான நிலைமையை நிறுத்த முடிந்துள்ளது.

எந்த ஒரு அரசியல்வாதியும் 12 ஆண்டுகளுக்கு மேல் பதவிகளில் இருந்தால், மக்களுக்கு வெறுத்து விடும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இவ்வாறான நிலைமையே ஏற்பட்டது எனவும் திஸாநாயக்க தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த கொடூரத்தை பாருங்கள்… (VIDEO)!!
Next post ராஜகிரியவில் சடலம் ஒன்று கண்டெடுப்பு!!!