​தேசியப்பட்டியலில் பெண்களின் வீதம் குறைவு!!

Read Time:1 Minute, 33 Second

10682015151398900876paffaral2அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல் நியமனங்களில் இம்முறை பெண்களின் பிரதிநிதித்துவம் திருப்திப்படுத்தும் விதத்தில் இல்லையென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தேசியப் பட்டியல் ஊடாக ஒரேயொரு பெண் உறுப்பினரே பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

எனினும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் ஊடாக 03 பெண் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தமுறை பாராளுமன்றத்திற்கு 556 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும், அவர்களில் 11 பேர் மாத்திரமே பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆகவே இந்தவிடயம் குறித்து அரசியல் கட்சிகள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாட்டு மக்களின் சுகதுக்கங்களை அறிய வேண்டியது நாட்டு தலைவனின் கடமை – ஜனாதிபதி!!
Next post தரம் 5 புலமை பரிசில் பரீட்சை நாளை!!