தொடர்ந்து சாப்பிட்டாலும் அல்சர் வரும்…!!!

Read Time:5 Minute, 9 Second

timthumb (10)காலை உணவையோ அல்லது பசிக்கும் போதே சாப்பிடாமல் இருந்தால் தான் வயிற்றுப் புண் எனப்படும் அல்சர் வரும் என்று சொல்வார்கள். ஆனால் தற்போதைய ஆய்வின் படி காலையில் ஆறு மணிக்கு உணவு, பிறகு கோப்பி, மதியம் ஒரு மணிக்கு உணவு, அதன் பின் தேநீர், மாலையில் திண் பண்டங்கள் அதனை பின் இரவு எட்டு மணிக்கு டின்னர் என்று நேரந்தவறாமல் சாப் பிட்டு வந்தால் தான் அல்லது சாப்பிட்டு வருபவர்களுக்குத்தான் அல்சர் வரும் என் கிறார்கள்.

ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமோ அல்லது சாம்பார் சாதமோ எடுத்துவைத்துவிடவும். அதனை பத்து அல்லது பதினைந்து நாள்கள் கழித்து திறந்து பாருங்கள். இப்போது அந்த சாதம் கெட்டு போய் நாற்றம் எடுக்கும். சில சமயங்களில் புழுக்கள் கூட வந்திருக்கலாம். மீண்டும் அந்த பாத்திரத்தை அப்படியே மூடி வைத்துவிடுங்கள். மேலும் பதினைந்து நாள்கள் கழித்தபின் திறந்து பாருங்கள். அந்த கெட்டுப் போன சாதம் விடமாக மாறி, அந்த பாத்திரத்தையே துளைப்போட்டிருக்கும்.

இப்போது அல்சர் எப்படி ஏற்படுகிறது என்பதை புரிந்துகொண்டிருப்பீர்கள். இதனால் நேரந்தவறாமல் சாப்பிட்டால் அல்சர் வரும் என்பதெல்லாம் பொய் என்பது நிரூ பணமாகிறது. பசிக்காத தருணங்களிலும் சாப்பிடுவதால் தான் அல்சரே வருகிறது. பசித்து சாப்பிடும் போது வயிற்றில் ஜீரண நீர் சுரக்கின்றன. வயிற்றிற்குள் நேரம் தவறாமல் ஜீரண நீர் சுரப்பதற்கான எந்த ஏற்பாடும் உடலில் நடைபெறுவதில்லை என்பதையும் உணர்ந்து கொள் ளுங்கள். ‘

மனித உடலானது முற்றிலும் உணர்வு களால் ஆனது. உணர்வுகளே மனித உடலை இயங்கச் செய்யத் தூண்டுகின்றன. உடனே உங்கள் மனதில் ஓர் எண்ணம் உதய
மாகலாம். வயிற்றில் ஜீரண நீர் சுரந்துவிடும் போது வயிற்றில் உணவு இல்லை யென்றால் அல்சர் வந்துவிடாதா? எனகேட்பீர்கள். அப்படி பார்த்தோமானால் இன்றைய திகதியில் பிச்சைகாரர்களுக்கும், தினசரி பசியால் வாடுபவர்களுக்கும் தான் அல்சர் வந்திருக்கவேண்டும். மூன்று வேளையும் சாப்பிடுபவர்களுக்கு வந்திருக்ககூடாடதல்ல வா? ஆனால் மருத்துவமனைகளில் சென்று பாருங்கள். மூன்று வேளையும் சாப்பிட வசதி படைத்த வர்களுக்கு தான் அல்சர் பாதிப்பு இருக்கிற்து.

நீங்கள் பசிக்காமல் மூன்று வேளையும் சாப்பிடும் போது ஜீரண நீர் சுரக்காத நிலையில் வயிற்றில் இருக்கும் உணவு அங்கேயே தங்கி, புளித்து, கெட்டுபோய், கெட்ட வாயுகளை உருவாக்குகிறது. தினந்தோறும் இது போன்ற செயல் தொடரும் போது கெட்டுப் போன உணவு விடமாக மாறு கின்றது. பாத் திரத்தில் வைத்த உணவு எப்படி விடமாக மாறி பாத்திரத்தை துளைத்ததோ, அதே போல் விடமாக மாறிய நீங்கள் சாப்பிட்ட உணவு வயிற்றில் அல்சரை உருவாக்குகிறது.

பசிக்கும் போது சாப் பிடாமல் இருந்தால் உடல் சோர்வடைந்து சத்துக் குறைபாடு ஏற்பட்டு அது தொடர்பான நோய்கள் வருமேத்தவிர வயிற்றில் அல்சர் வராது. அதே சமயத்தில் அல்சர் வயிற்றில் மட்டும் வராமல் உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வரலாம்.

நாட்பட்டு வெளியேற முடியாமல் தவிக் கும் கழிவுகள் அந்த இடத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட இடத்தில் புண்கள் உருவாகின்றன. அதையே அல்சர் என்கிறோம். எனவே அல்சர் புண்கள் குணமாக வேண்டும் என்றால் உடலில் தேங்கியுள்ள அழுக்குகள், கழிவுகள் முதலில் வெளியேற்றப் படவேண்டும். கழிவுகள் வெளியேறாவிட்டால் மீண்டும் மீண்டும் அல்சர் வந்து கொண்டே யிருக்கும். அதை தடுக்க இயலாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும், சமூக ஊடகங்களும் – ஹரிகரன் (கட்டுரை)!!
Next post சரணவுக்கு விளக்கமறியல் நீடிப்பு, மற்றைய மூவரும் பிணையில்!!