By 17 September 2015 0 Comments

கைத்தொலைபேசி அழைப்பால், காப்பாற்றப்பட்ட 3 பெண் பிள்ளைகள்!!

timthumb (5)சில நிமிடங்கள் சென்றிருப்பினும் நான்கு உயிர்களும் பலியாகியிருக்கும், கைடயக்கத் தொலைபேசி தகவலினால் இவ்வுயிர்கள் காப்பாற்றப்பட்டன…

பதுளை மாவட்டத்தின் ரம்மியமான பிரதேசங்களிலொன்று ‘எல்ல’ எல்ல பொலிஸ் நிலையத்தில் இம்மூன்று பெண் பிள்ளைகளும் வைக்கப்பட்டிருந்தனர்.

முறையே பன்னிரெண்டு, எட்டு, ஐந்து வயதுடைய இப்பெண்பிள்ளைகளின் தாய் மூன்று நாட்களுக்குமுன் வீட்டிலிருந்து சென்றவர் திரும்பவில்லை எங்கு சென்றார் என்னவானார்.

எனத் தெரியவில்லை. மூன்று பிள்ளைகளின் தகப்பன் கூலிவேலை செய்து கிடைக்கும் வருமானத்தை தேடிக்கொள்வார்.

வேலை கிடைக்காவிட்டால் சாப்பிடக்கூட முடியாத நிலையேற்படும். இவரது மனைவி முன்பு கொழும்பிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் வேலை செய்தார்.

கணவருக்கு விருப்பமில்லாததால் தொழிலுக்கு செல்லாமல் பின்னர் வீட்டிலிருந்தார். கணவர் சந்தேகப்பட்டதினால் மனைவி தொழிலுக்கு செல்லாமலிருந்தார் என தெரிய வருகிறது.

இதன் காரணமாக அடிக்கடி இவர்களுக்கிடையில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதுண்டு. இதன் பின்னணியிலேயே இவர் வீட்டை விட்டு சென்றுள்ளார்.

நாட்டின் எட்டாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்ற தினம் காலையில் பன்னிரெண்டு வயதுடைய மூத்தமகளை அழைத்து மாத்தறை செல்லலாமென்றார் தந்தை.

பிள்ளைகளும் தயாராகி வந்தனர் பண்டாரவளைக்கு வந்த இவர்கள் வெல்லவாய பேரூந்திலேறி ராவணா நீர் வீழ்ச்சியருகில் இறங்கினர்.

நீர் வீழ்ச்சி பகுதிக்கு சென்ற இந்நான்குபேரும் …. “ஒருவரிடம் கையடக்க தொலைபேசியை கேட்டு அம்மாவுடன் தொடர்பு கொண்டு தாம் நால்வரும் ராவணா நீர்வீழ்ச்சியில் குதிக்கப்போவதாக கூறும்படி தம் மகளிடம் கூறச்சொன்னார்.

மகள், தாயிடம் கதைத்தபோது நீங்கள் ஒருவரும் சாகவேண்டாம் என அழுதவாறு தாய் கூறியுள்ளார்.

“இப்பிள்ளைகள் மூவரும் என் தங்கையினுடையவை, வீடு அடுத்தடுத்துள்ளன தினமும் காலையில் என் வீட்டுக்குவரும் பிள்ளைகள் அன்று வராததினால் அவர்களது வீட்டுக்கு சென்று பார்த்தபோது ஒருவரும் காணப்படவில்லை.

வீட்டின் உட்புற சுவரில் நாம் அனைவரும் ராவணா நீர்வீழ்ச்சி பகுதிக்கு குதிக்கப்போவதாக எழுதியிருப்பதை கண்டு உடனடியாக தியதலாவ பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்தார். பிள்ளைகளின் பெரியம்மா.

சம்பவம் நடைபெறுவதற்கு முன்தினம் பிள்ளைகளின் தகப்பன் நாம் அனைவரும் விஷமருந்துவோமா என பிள்ளைகளிடம் கேட்டபோது பிள்ளைகள் வேண்டாமென்றுள்ளனர்” என்றதையும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

அன்றும் உல்லாசப் பயணிகள் நிறைந்திருந்தனர். ஒருவர் மூன்று பெண்பிள்ளைகளுடன் நீர் வீழ்ச்சிப் பகுதிக்கு வந்தார். அவர் கலவரத்துடன் காணப்பட்டார்.

என்னிடம் தொலைபேசியை கேட்டு எவருடனோ பேசினார்கள். அவர்கள் பேசியதை நான் கேட்கவில்லை. பின்னர் என்னிடம் தொலைபேசியை தந்தார். இதையடுத்து எனக்கு தொலைபேசி அழைப்பொன்று கிடைத்தது.

அதில் ஒரு பெண் அழுதவாறு என்னுடன் பேசினார். துரை அவர்களே நீர்வீழ்ச்சிப் பகுதியில் என் கணவரும் மூன்று பிள்ளைகளுமுள்ளனர்.

இவர்கள் தற்கொலை முயற்சியிலீடுபடவுள்ளனர் தயவு செய்து குதிக்க விடாது தடுத்து விடுங்கள்” என்றார் நான் உடனே அவ்விடத்துக்கு ஓடினேன். அங்கு பிள்ளைகளின் தந்தை அழுதுகொண்டிருந்தார்.

தன்னையும் பிள்ளைகளையும் விட்டு மனைவி சென்று விட்டதாகவும் மனைவி சிலரிடம் கடன்பட்டுள்ளார். தனக்கு வருமானமில்லையென கூறினார். நான் அவரை ஆறுதல் செய்து சமாதானப்படுத்தினேன்.

உடனே நான் அப்பெண்ணுடன் தொடர்பு கொண்டு நீர்வீழ்ச்சிப்படுத்தி வருமாறு கூறினேன். பணமில்லையென்றும் தான் ஹோமாகமையிலிருப்பதாகவும் கூறினார். பணம் நான் தருகிறேன் முச்சக்கரவண்டியில் வருமாறு கூறினேன்.

பிள்ளைகள் ஒன்றுமே சாப்பிட்டிருக்க வில்லை அருகிலுள்ள ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிட ஏற்பாடுகளை செய்தேன்.

“எல்ல” பிரதேச மரண விசாரணை அதிகாரி எஸ். ஜயசேகரவின் புதல்வன் ‘லஹிரு பிரபாத்’அங்கிருந்தால் அவரின் உதவியுடன் விடயத்தை மரண விசாரணை அதிகாரிக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

தான் வரும்வரை தந்தையையும் பிள்ளைகளையும் நீர்வீழ்ச்சியின் மேல் பகுதிக்குசெல்ல இடமளிக்கவேண்டாமென பொலிஸ் பொறுப்பதிகாரி அவ்விளைஞனிடம் கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில் பொறுப்பதிகாரி எல்.டி.என். கருணாரத்ன, உபபொலிஸ் பரிசோதகர் சனத் பிரியன்த, பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பந்துமதி, கான்ஸ்டபிள் தேசபிரிய ஆகியோர் ஸ்தலத்துக்கு வந்து தந்தையையும் மூன்று பிள்ளைகளையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றர்.

காதல் கைகூடாததால் இளம் காதலர்கள் இதே நீர்வீழ்ச்சியில் குதித்துமரணித்த சம்பவம் சில மாதங்களுக்கு முன் சம்பவித்தது. இவர்களும் நீர் வீழ்ச்சியில் குதிக்கமுன் கையடக்க தொலைபேசியில் தம் பாடசாலை மாணவர்களுக்கு அறிவித்திருந்தனர். இருப்பினும் இவர்களிருவரையும் காப்பாற்ற முடியவில்லை.

இந் நான்கு பேரையும் கையடக்க தொலைபேசி தகவல் மூலம் காப்பாற்ற முடிந்தது இதற்கு காரணமானவர் கையடக்க தொலைபேசியின் உரிமையாளர் களுத்துறையை சேர்ந்த எல்.எப. பத்மசிறி.

எல்.எ. பத்மசிறி, மரண விசாரணை அதிகாரி எஸ். ஜயசேகர, இவரது மகன் லஹிரு பிரபாத், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல்.டி.என். கருணாரத்ன ஆகியோரின் உடனடி நடவடிக்கையின் காரணமாக நான்கு உயிர்கள் காப்பாற்றப் பட்டன.Post a Comment

Protected by WP Anti Spam