விமானத்தில் அழுத பெண் பயணி: அதிரடியாக இறக்கிவிட்ட சிப்பந்தி (வீடியோ இணைப்பு)…!!

Read Time:2 Minute, 31 Second

sought_women_001அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவரை விமான சிப்பந்தி கீழே இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஆரிகன் மாநிலத்தில் உள்ள போர்ட்லேண்டைச் சேர்ந்த டியானா ஃபோ(27) என்பவர், டக்சனில் விடுமுறையை கழித்துவிட்டு போர்ட்லேண்ட் திரும்ப பீனிக்ஸில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 408ல் திரும்பியுள்ளார்.

விமானத்தில் ஏறிய அவர் தனது இருக்கையில் அமர வரிசையில் நின்றபோது சக பயணி ஒருவருடன் பேசியுள்ளார்.

இதை பார்த்த ஆண் விமான சிப்பந்தி அவரை திட்டியுள்ளார். மூன்று முறை கூறிவிட்டேன் பேசாமல் ஒழுங்காக அங்கேயே நில்லுங்கள் என்று அவர் டியானாவை மிரட்டியுள்ளார்.
அதன் பின்னர், நீங்கள், உங்கள் இருக்கையில் அமர்ந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த டியானா தனது இருக்கையில் அமர்ந்ததும் அழத் துவங்கிவிட்டார்.

இந்நிலையில் அந்த சிப்பந்தி திரும்பி வந்து உங்கள் பைகள் எங்கே உங்களை விமானத்தை விட்டு கீழே இறக்கிவிடுகிறோம் என்று கூறி அவரின் உடைமைகளை எடுத்துள்ளார்.

டியானா வேறு வழியில்லாமல் அழுது கொண்டே விமானத்தை விட்டு கீழே இறங்கினார்.
இந்த சம்பவத்தை டியானாவுக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது, இதுதொடர்பான செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அந்த விமான நிறுவனம், நாங்கள் அந்த விமானபயணியை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் எங்களது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் தரமான பயணத்தை வழங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சியில் பஸ்- மோட்டார் வண்டி மோதி விபத்து…!!
Next post நீரிழிவு இருக்கா ? மனச் சோர்வு வரும் எச்சரிக்கை!