இது அதிசயமா? இல்லை அதற்கும் மேல…!!
ஒவ்வொருவரும் செய்யும் அன்றாட நடவடிக்கைகளில் சிலருக்கு ஏதாவத அதிசயம் ஏற்படுவது உண்டு. இது குதிரைக் கொம்பாகவே இருக்கும். அதே போல தான் இச் சம்பவமும் கேள்விப்படும் அனைவரையும் வியக்க வைக்கிறது.
அதாவது Jim Archibald எனும் 67 வயதான நபர் காலை உணவினை தயார் செய்வதற்காக வாங்கி வைத்திருந்த 10 முட்டைகள் அடங்கிய பாக்ஸிலிருந்து இரண்டு முட்டைகளை எடுத்து உடைத்திருக்கின்றார். இதன்போது அசாதரணமாக அம் முட்டையினுள் இரு மஞ்சள் கருக்கள் காணப்பட்டன.
இதே போன்றே அடுத்த நாள் அதே பாக்ஸிலிருந்து 4 முட்டைகளையும், அதற்கு அடுத்தநாள் எஞ்சிய 4 முட்டைகளையும் உடைத்திருக்கின்றார். அவ்வாறு உடைக்கப்பட்ட அனைத்து முட்டைகளினுள்ளும் 2 மஞ்சள் கரு வீதம் இருந்துள்ளது.
இதுபற்றி சில மேதாவிகள் தெரிவிக்கையில் பில்லியனில் ஓரிரு முட்டைகளுக்கு இவ்வாறு இரு மஞ்சட் கரு இருக்கலாம், ஆனால் இங்கு தொடர்ச்சியாக உடைக்கப்பட்ட 10 முட்டைகளிலும் இரு மஞ்சட் கரு வீதம் இருந்தமை ஆச்சரிப்பட வேண்டிய விஷயம் தான் என குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating