அமெரிக்காவில் விபத்து: 6 இந்தியர்கள் பலி…!!
Read Time:1 Minute, 19 Second
பீகாரை சேர்ந்தவர் பாஸ்கர் ஷா (வயது 31). இவர், அமெரிக்காவில் செயல்படும் இந்தியாவை சேர்ந்த கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். ஒல்காமா நகரில் மனைவி அன்னுஜா மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
அவர் தனது குடும்பத்தினர் மற்றும் 2 பேருடன் ஒரு வேனில் சென்று கொண்டு இருந்தார். வேனை பாஸ்கர் ஷா ஓட்டினார். அப்போது சாலையில் சென்ற டிராக்டர் டிரெயிலர் மீது வேன் மோதியது.
இதில், வேனில் சென்ற 6 பேரும் உயிர் இழந்தனர். இறந்தவர்களில் மற்றொருவர் அக்னி பால்சிங் (34) என்பது தெரிய வந்தது. மற்றொரு பெண்ணும் இதில் இறந்துள்ளார். அவருடைய பெயர் விவரம் தெரியவில்லை. பாஸ்கர் ஷா ஓட்டிச் சென்றது பழைய பழுதான வேன் என்றும், அவர் வேனை வேகமாக ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் அமெரிக்க போலீசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating