கொலஸ்ட்ராலை குறைக்கும் சூப்பர் விதை..!!

Read Time:3 Minute, 5 Second

625-0-560-350-160-300-053-800-668-160-90கடுகு போன்று சுவையை தரக்கூடிய ஆளி விதை, நம் உடம்பில் ஏற்படும் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது.

இந்த ஆளி விதையில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம், ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆக்ஸிஜனின் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள லிக்னான்ஸ் என்ற சத்துக்களும், கரையக் கூடிய மற்றும் திடமான நார்ச்சத்துக்களும் அதிகமாக நிறைந்துள்ளது.

நம் அன்றாட உணவில் தினமும் ஆளி விதையை சேர்த்துக் கொள்வதால், பலவகையான நோய்கள் தடுக்கப்பட்டு அதிக நன்மைகள் கிடைக்கிறது.

ஆளி விதையில் கிடைக்கும் நன்மைகள்

ஆளி விதையில் ஒமேகா 3 அதிகமாக இருப்பதால், நம் உடம்பில் உள்ள வெள்ளை அணுக்களை ரத்த நாளங்களின் உள் வளையங்களுடன் சேர்த்து வைத்து, தமனிகளில் தங்குகின்ற கழிவுப் பொருட்களைத் தடுக்கின்றது.

உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் டயட்டில் இருக்கும் போது, இந்த ஆளி விதைகளை உணவில் சேர்த்துக் கொண்டால், உடலின் கெட்டக் கொழுப்புகளை கரைத்து, உடல் எடையை குறைக்கிறது.
ஆளி விதைகளை ஊறவைத்து, சாப்பிட்டவுடன் வெந்நீர் குடிக்க வேண்டும் இவ்வாறு செய்து வந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகிவிடும்.

பிரசவித்த பெண்கள் ஆளி விதையை பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால் தாய்ப் பால் அதிகமாக பெருகும்.

ஒரு தேக்கரண்டி ஆளிவிதை பொடியில், ஒரு தேக்கரண்டி நெய், ஒரு தேக்கரண்டி சர்க்கரை ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் வலுவடைந்து, ஆண்மை சக்தி அதிகரிக்கச் செய்யும்.

ஓமம், வெந்தயம், கருஞ்சீரகம் மற்றும் ஆளிவிதை பொடி ஆகியவற்றை சமமாக கலந்து, தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் வயிறு தொடர்பாக ஏற்படும் பல பிரச்சனைகள் காணாமல் போய்விடும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டவிரோத வர்த்தகத்திலீடுபட்ட 11 வர்த்தகர்கள் கைது…!!
Next post ஆண்களை ஹீரோவாக பார்க்கும் பெண்களின் மாயவாழ்க்கை..!!