சன்பீஸ்ட் ஓப்பன் டென்னிஸ்: ஹிங்கிஸ்- சானியா அரை இறுதியில் மோதல்
Read Time:1 Minute, 2 Second
முன்னணி வீராங்கணைகள் பங்கேற்ற சன்பீஸ்ட் ஓப்பன் டென்னிஸ் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் நிலை வீராங்கனையான மார்ட்டினா ஹிங்கிஸ்(சுவிட்சர்லாந்து) கால் இறுதியில் 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தாமரைனை(தாய்லாந்து) தோற்கடித்தார்.
மற்றொரு கால் இறுதியில் இந்திய வீராங்கனை சானியாமிர்ஷா 6-4, 7-5 என்ற கணக்கில் பிரான்சை சேர்ந்த நெசாயை தோற்கடித்தார். அரை இறுதியில் ஹிங்கிஸ்- சானியா மோதுகிறார்கள். மற்றொரு அரைஇறுதியில் ஒல்சா பவுச்கோவா (ரஷியா)- இரோடா துல்யாக்னோவா (உஸ்பெகிஸ்தான்) மோதுகிறார்கள்.