யுத்த நிலைவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்

Read Time:1 Minute, 31 Second

யுத்த நிலைவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியாவின் பாராளுமன்றத்தின் பலகட்சிப் பிரதிநிதிகள், இலங்கை மனிதாபிமான நிலைவரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பிரதமர் கோர்டன் பிரவுண் தெரிவித்துள்ளார். இந்தவார இறுதியில் பிரித்தானியா சர்வதேச அபிவிருத்தி விவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்வாரென்று செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பது குறித்தும் பிரித்தானிய பாராளுமன்றக்குழு, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் என்றும் ஊடகச் செய்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் மூலம் நிரந்தர சமாதானத்தை எட்ட முடியாதென பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மக்கள் மீட்பு தொடர்பில் புளொட் தலைவர் சித்தார்த்தன் ஜனாதிபதிக்கு கடிதம்..!!
Next post பயங்கரவாதத்தை ஒழித்து ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஒரு சில மணி நேரமே உள்ளது -ஜனாதிபதி