மிக அழகான சேவலொன்று 7,500 சவூதி ரியால்களுக்கு ஏலத்தில் விற்பனை..!!
சவூதி அரேபியாவில் மிக அழகான சேவலொன்று 7,500 சவூதி ரியால்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வளைகுடாவின் மிகப்பெரிய நாடான சவூதி அரேபியாவில் ஏற்கெனவே குதிரைகள், ஒட்டகங்கள், ஆடுகள் மற்றும் பருந்துகளுக்கான அழகுப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஆனால் முதற்தடவையாக கோழிகள் சம்பந்தமான அழகுப்போட்டியொன்று தலைநகர் ரியாத் அருகிலுள்ள ஒரு பண்ணையில் அண்மையில் நடைபெற்றது.
சவூதி அரேபிய முடாப் அல் ஒத்மன் என்ற விவசாயி கடந்த வெள்ளிக்கிழமை தனது பண்ணை வீட்டில் இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த போட்டியில் பங்குபற்றுவதற்காக அழகான கோழிகள், சேவல்களுடன் 500 இற்கும் மேற்பட்ட விவசாயிகள், வர்த்தகர்கள் பங்குபற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றியவர்கள் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததாக அல் ஒத்மன் தெரிவித்தார்.
“சேவலுக்கான ஏலத்தில் 7,500 (சுமார் ௨௬௨,௦௦௦ ருபா )சவூதி ரியால்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்ற சிலர் தமது கோழிகளை விற்பனை செய்ய விரும்பாததால் ஏலத்தில் பங்குபற்றவில்லை. ஆனால் கோழிகள், சேவல்களுக்கான அழகுப் போட்டியில் மாத்திரம் அவர்கள் கலந்து கொண்டார்கள்” என அல் ஒத்மன் கூறினார்.
ஆனால் அப்போட்டியில் வெற்றி பெற்ற சேவல் எது என்பதையும் அது எவ்வாறு தெரிவுசெய்யப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிடவில்லை.
Average Rating