முத்தக்காட்சியின் போது, உதட்டில் காயமடைந்த எம்மா வட்ஸன்
நடிகை எம்மா வட்ஸன் நோவா திரைப்படத்தில் நடித்தபோது முத்தக்கட்சியொன்றில் நடித்தபோது உதட்டில் காயமடைந்து இரத்தம் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார்..
நடிகர் டக்ளஸ் பூத்தும் எம்மா வட்ஸனும் முத்தமிடும் காட்சியும் படமாக்கப்பட்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த மாதம் வெளியான சர்ச்சைக்குரிய நோவா திரைப்படத்தில் நோவாவின் மூத்த புதல்வரான ஷேமின் வேடத்தில் நடிகர் டக்ளஸ் பூத் நடித்துள்ளார். ஆவரின் மனைவி ஐலாவின் வேடத்தில் பிரித்தானிய நடிகை எம்மா வட்ஸன் நடிக்கிறார்.
இப்படத்தில் இடம்பெறும் முத்தக்காட்சியொன்று மீண்டும் மீண்டும் படம்பிடிக்கப்பட்டபோது எம்;மா வட்ஸனின் உதடு காயமடைந்துடன் நடிகர் டக்ளஸ் பூத்தின் வாயும் வீங்கிவிட்டது.
ஹரி பொட்டர் திரைப்படப் புகழ் நடிகையான எம்மா வட்ஸன் இது குறித்து கூறுகையில், நாம் இருவரும் ஓடிவந்து ஆர்வமுடன் முத்தமிடுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
முதல் நான்கு, ஐந்து தடவை இக்காட்சி படம்பிடிக்கப்பட்டபோது சாதாரணமாக இருந்தது. ஆனால் 6 ஆவது தடவை எனது உதட்டில் இரத்தம் வந்துவிட்டது’ எனத் தெரிவித்துள்ளார்.
Average Rating