குடும்பமொன்றில் அடுத்தடுத்து 4 தலைமுறைகளில், இரட்டைக் குழந்தைகள்
Read Time:1 Minute, 12 Second
இரட்டைக் குழந்தைகள் பிறப்பது அரிய சந்தர்ப்பமாக கருதப்படுகின்ற நிலையில் குடும்பமொன்றில் அடுத்தடுத்து 4 தலைமுறைகளில் இரட்டைக் குழந்தைகள் பிரசவமான அதிசய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 4 தலைமுறைகளில் இரட்டைக் குழந்தைகள் பிரசவமானது 4 பில்லியன் பிரசவங்களுக்கு ஒன்றென நிகழும் அபூர்வ நிகழ்வாகும்.
பிரிஸ்டலைச் சேர்ந்த மெல்கவ்னனி (36வயது) என்ற பெண்ணே இவ்வாறு அபூர்வ இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார். மெல்கவ்னனியும் இரட்டையர்களில் ஒருவராவார். அவரது இரட்டை சகோதரி ஷெரில் ஆவார்.
மெல்லினதும் ஷெட்டினதும் தந்தையான கெவினும் அவரது சகோதரரான கெய்த்தும் இரட்டை சகோதரர்களாவர். அதேசமயம் கெவினும் இரட்டை சகோதரிகளில் ஒருவராவார்.
Average Rating