இதற்கு என்ன பதிலளிக்கப் போகிறார் அமிர்கான்?
பாலிவுட் நடிகர் ஆமிர் கான் தோன்றும் நிர்வாண போஸ் மற்றும் அவர் நடித்த பி.கே. படத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட சிவில் வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 25ம் திகதிக்குள் பதிலளிக்கும்படி ஆமிர் கானுக்கு மும்பை சிவில் கோர்ட் உத்தரவிட்டு இருக்கிறது.
ஆமிர் கான் நடித்த பி.கே என்ற ஹிந்தி திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. விது வினோத் சோப்ரா தயாரித்துள்ள இந்த படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார்.
இந்த படம் தொடர்பான போஸ்டர் ஒன்று அண்மையில் வெளியானது. அதில் ஆமிர் கான் ஒரு ரயில் பாதையில் கையில் ஒரு டிரான்சிஸ்டர் ரேடியோவை பிடித்தபடி நிர்வாண கோலத்தில் காணப்படுகிறார்.
இந்த போஸ்டர் கடந்த ஒரு மாதமாக செய்தித்தாள்களிலும் டி.வி.யிலும் காட்டப்படுகிறது. இன்டர்நெட்டிலும் வலம் வருகிறது. இந்த போஸ்டருக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனு ஒன்றை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்து விட்டது. உங்களுக்கு பிடிக்காவிட்டால் படத்தை பார்க்காதீர்கள்.
இவையெல்லாம் கலை மற்றும் கேளிக்கை தொடர்பானவை. அவை அப்படியே இருக்கட்டும். மதத்தை இதில் சம்பந்தப்படுத்தாதீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
இந்நிலையில் சமூக ஆர்வலர் ஹேமந்த் பாட்டீல், இந்த நிர்வாண போஸ்டர் மற்றும் பி.கே படத்துக்கு தடை விதிக்கக்கோரி மும்பை சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இந்த மனுவுக்கு வரும் 25ம் திகதிக்குள் பதிலளிக்கும்படி ஆமிர்கானுக்கு நோட்டீஸ் அனுப்ப, சிவில் நீதிபதி எம்.எஸ்.சர்மா நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
Average Rating