ரசிகர்களின் வரவேற்பை பெற்ற மணிரத்னத்தின் ஒ காதல் கண்மணி டிரைலர்!!

Read Time:2 Minute, 15 Second

be4f95c6-e98d-4e1f-a17a-4308443b87b8_S_secvpfஇயக்கம் மற்றும் துல்லியமான திரைக்கதை மூலம் அனைவரையும் வசீகரித்த மணிரத்னம், தற்போது ‘ஒ காதல் கண்மணி’ படத்தின் மூலம் நமது மனதைக் மீண்டும் கொள்ளை கொள்ள இருக்கிறார்.

‘ஒ காதல் கண்மணி’ படத்திற்காக ஒளிப்பதிவில் தனி முத்திரை பதித்த பி.சி.ஸ்ரீராம் உடன் கைகோர்த்திருக்கிறார் மணிரத்னம். ‘மெளன ராகம்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘நாயகன்’, ‘கீதாஞ்சலி’ மற்றும் ‘அலைபாயுதே’ உள்ளிட்ட படங்களில் இந்த வெற்றிக் கூட்டணி இணைந்து பணியாற்றி இருக்கிறது.

‘ரோஜா’ முதல் தொடர்ச்சியாக தனித்துவமான இசையை விருந்தாக்கி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் – மணிரத்னம் கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இக்கூட்டணி இணைப்பில் வெளியாகும் 12வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஒ காதல் கண்மணி’ பாடல்களை மணிரத்னத்துடன் எப்போதும் இணைந்து பணியாற்றி வரும் வைரமுத்து எழுதி இருக்கிறார்.

துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் இப்படத்தில் நாயகன் மற்றும் நாயகியாக நடித்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து வரும் ‘ஒ காதல் கண்மணி’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் இன்று வெளியானது. இந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

ஒரு நிமிடம் இருபது வினாடிகள் ஓடக்கூடிய இந்த டிரைலரை மார்ச் 6-ம் தேதி முதல் திரை அரங்குகளில் வெளியிடவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாலிபரை கொன்று கால்வாயில் உடல் வீச்சு: பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது!!
Next post கடத்தல் கும்பலால் திருட்டு தொழிலுக்கு கடத்தப்பட்ட மேலும் 4 சிறுவர்கள் மீட்பு!!