மேலும் சில அமைச்சர்கள் இன்று பதவியேற்பு!!
Read Time:57 Second
தேசிய அரசாங்கத்தில் மற்றுமொரு தொகுதி அமைச்சரவை அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இன்று மாலை இரண்டு மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி முன்னிலையில் அவர்கள் பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இதன் போது ஐக்கிய தேசிய கட்சியில் பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 27 பேரும், அமைச்சரவை அமைச்சராக ஒருவரும் பதவி பிரமாணம் செய்துகொள்வார்கள்.
சுதந்திர கட்சிக்கு அமைச்சரவை அமைச்சர் பதவிகள் 2 மற்றும் மீதமுள்ள இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் பதவிகள் கிடைக்கவுள்ளன.
Average Rating