கைது செய்யப்பட்ட அகதிகள்
தமிழகத்திற்கு அகதிகளாக செல்லவிருந்தபோது தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த புதன்கிழமை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட திருமலையைச் சேர்ந்த 115பேர் நேற்றுபிற்பகல் தலைமன்னார் பங்குத்தந்தை அன்டனிதாஸ் வலிமாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது புனித லோரன்ஸ்சியா ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களையம்...
நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியுடன் நீண்ட பேச்சுவார்த்தை
இலங்கைக்கு விஜயம் செய்த நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெம் இன்று (26.05.2006) முற்பகல் அலரிமாளிகையி;ல் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார். சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்ட இந்த...
காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு
கிண்ணியா மஹ்ரூப் நகரில் கடந்த சனிக்கிழமை காணாமல் போயிருந்த சிறுமி சுமையா பானு மஹமட்லாபீர் (9வயது) புதைகுழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். (more…)
வெடிவிபத்தில் லெப். கேணல் வீரமணி வீரச்சாவு
யாழ். மாவட்டம் குடாரப்புப் பகுதியில் புதன்கிழமை இடம்பெற்ற வெடி விபத்தில் லெப்.கேணல் வீரமணி வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். லெப்.கேணல் வீரமணி என்றழைக்கப்படும் வவுனியா பாவற்குளம் முதலாம் யூனிற்றை சொந்த முகவரியாகவும், கிளிநொச்சி தொண்டமான்...
பருத்தித்துறையில் இரு இளைஞர்கள் கைது.
யாழ். வடமராட்சி பருத்தித்துறை புறாப்பொறுக்கிச் சந்தியில் இளைஞர்கள் இருவர் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)
மட்டக்களப்பில் இலங்கை காவல்த்துறையினர் ஒருவர் சுட்டுக் கொலை.
நேற்று மாலை 3 மணியளவில் கல்லடி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகில் காவற்துறையில் பணியாற்றி வரும் தமிழரான ஆரோக்கியம் பிரசன்னா (வயது 28) என்பவர் அவ்விடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த புலிகளின்...
திருமலையில் ஊர்காவல் படை வீரர் சுட்டுக்கொலை
திருணோமலை பாலையூற்றில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களினால் சிறிலங்கா ஊர்காவல் படை வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. (more…)
கொக்குவிலில் கிளைமோர்த் தாக்குதல்: 2 இராணுவத்தினர் காயம்- பொதுமகன் பலி
யாழ். கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் இருவர் படுகாயமடைந்தனர். பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டார். (more…)
மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: போராளி பலி- பொதுமகன் காயம்
விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மன்னார் மடுப்பகுதியில் சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் போராளி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். (more…)
நோர்வே புலிகளைத் தடைசெய்யவேண்டும் – பாதிக்கப்பட்ட நோர்வே தமிழர்
நோர்வேயில் செயற்படும் தமிழர் ஜனநாயக அமைப்பின் தலைவரான திரு சிவராஜா ராஜசிங்கம் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 25 நாடுகள் புலிகள் ஓர் பயங்கரவாத அமைப்பு என...
ஐக்கிய தேசியக்கட்சியின் குற்றச்சாட்டுக்கு ஜே.வி.பி விளக்கம்
இலங்கையின் சமாதான செயற்பாடுகளில் ஏற்பாட்டாளராக நோர்வே செயற்படும்வரை ஜே.வி.பி எந்தவொரு விடயத்தையும் நோர்வேயுடன் பகிர்ந்துகொள்ளாது. இந்நிலையில் நோர்வேயூடாக ஜே.வி.பி புலிகளுக்கு இரகசிய செய்தியொன்றை அனுப்பியுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்துவதில் எந்தவொரு...
காத்தான்குடியில் புலிகளின் கிளைமோர்த் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பொலிசார் பலி
மட்டக்களப்பு காத்தான்குடிப் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிசாரைப் பார்வையிடச் சென்ற பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று புலிகளின் கிளைமோர்த் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. (more…)
இராணுவத்தாலும் ஈ.பி.டி.பியாலும் அச்சுறுத்தலென கஜேந்திரன் பாராளுமன்றத்தில் முறைப்பாடு
இராணுவத்தினராலும் ஈ.பி.டி.பியினராலும் யாழ்ப்பாணத்திலுள்ள தமது காரியாலயமும், சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை காரியாலயமும் தீவைக்கப்பட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறப்பினர் எஸ்.கஜேந்திரன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். (more…)
வவுனியாவில் இரு சகோதரர்கள் வெள்ளை வானில் வந்தோரால் துவக்கு முனையில் கடத்தப்பட்டனர்.
வவுனியா மரக்காரம்பளை கணேசபுரம் பகுதியில் நேற்று புதன்கிழமை அதிகாலை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் வெள்ளை வானில் வந்தோரால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். (more…)
கொழும்பு மாநகரசபையின் மூக்குக்கண்ணாடி குழு தலைவர் ராஜேந்திரன் பத்திரிகைகளுக்கு விடுத்திருக்கும் செய்தி
மூக்குக்கண்ணாடி சின்னத்தில் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ள எமது சயேற்சைக்குழு அடுத்தமாத முற்பகுதியில் மாநகரசபை அங்கத்தவர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்கள் இராமநாதன் கணேசனை மேயராகவும் சேபால வசந்தவை பிரதிமேயராகவும் தேர்தல் ஆணையாளர்களக்கு சிபாரிசு செய்து...
மட்டக்களப்பில் இரண்டு புலி உறுப்பினர்கள் படையினரால் சுட்டுக்கொலை
மட்டக்களப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட புலிகள் இயக்கத்தினர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் செங்கலடி குமாரவேலியார் பகுதியில் இடம் பெற்றுள்ளது. (more…)
தமிழகத்திற்கு செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையிலிருந்து நேற்று 234அகதிகள் தமிழகம் சென்றடைந்துள்ளனர். ஒரேநாளில் பெருமளவான அகதிகள் தமிழகத்தை சென்றடைந்தமை இதுவே முதற்தடவை என்று தெரிவிக்கப்படுகிறது. இராமேஸ்வரம் பகுதிக்கு அண்மையில் உள்ள அரிச்சல்முனை, சரன்கோட்டை ஆகிய பகுதிகளிலேயே படகுகளில் சென்ற அகதிகள்...
ஈராக்கில் பதவியேற்றுள்ள புதிய ஜனநாயக அரசுக்கு துணை நிற்போம் அமெரிக்க அதிபர் ஜோர்ச் புஷ் உறுதி
ஈராக் நாட்டின் பிரதமராக நூரி அல் ரூ மாலிக்கி என்பவர் நேற்று பதவியேற்றார். போருக்கு பின் பதவியேற்கும் முழுநேர பிரதமர் மாலிக்கி என்பது குறிப்பிடத்தக்கது. நாட்ட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றுக்குத்...
மட்டக்களப்பில் இந்தியர் கடத்தப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பகுதியில் கடந்த 23-05-2006 அதன்று அதிகாலை இந்திய வியாபாரியான ராதாகிருஷ்ணன்(48) என்பவரை புலிகள் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. (more…)
புலிகளின் பிரதேசத்துக்கு மேலாக சிறிலங்கா உளவு விமானம்??
அம்பாறையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு மேலாக சிறிலங்கா விமானப்படையின் உளவு விமானம் பறந்து வேவு பார்த்துச் சென்றுள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிடம் புலிகள் முறைப்பாடு செய்துள்ளனர். (more…)
தமிழர் கொழும்பு மாநகர முதல்வராகிறார்
நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பு சுயேட்சைக்குழு கைப்பற்றியது தெரிந்ததே. (more…)
கண்ணிவெடி விபத்தில்….
கண்ணிவெடி விபத்தில் ஹலோ ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவன ஊழியர் படுகாயம் யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கில் கண்ணி வெடி அகற்றும் பணியை செய்துவந்த ஹலோ ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் சுளிபுரத்தை சேர்ந்த...
புலிகளின் பதிலில் உத்தரவாதமாக கருத முடியாது – கண்காணிப்புக்குழு
கடல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அரசாங்கத்திடமும், புலிகளிடமும் உத்தரவாதம் கோரியிருந்த போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுக்கு புலிகள் கடிதம் அனுப்பியிருந்ததாக தெரிவித்துள்ளனர். (more…)
கிளைமோர் தாக்குதலில் மூவர் பலி மூவர் படுகாயம்
வவுனியா ஈச்சங்குளம் வீதியிலுள்ள மரைக்காறம்பளை பகுதியில் இன்றுகாலை 9.30மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு படையினரும், ஒரு பொலீசாரும் பலியாகியுள்ளதுடன், இரு படைவீரர்களும், ஒரு பொலீசாரும் காயமடைந்துள்ளனர். (more…)
யாழில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு
யாழ். மல்லாகம் சந்தியில் வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. (more…)
எனது வருகையால் முன்னேற்றம் ஏற்படாது: எரிக் சொல்ஹெய்ம்
இலங்கைக்கான தனது வருகையால் தற்போதைய நிலைமைகளில் முன்னேற்றம் ஏதும் ஏற்படக் கூடிய சாத்தியமில்லை என்று நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை அமைதித் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். (more…)
வடக்கு கிழக்கு மக்களை பிரபாகரன் கும்பலின் கொடூரப்பிடியிலிருந்து மீட்கும் வரை எமது போராட்டம் தொடரும் -‘ரிஎம்விபி”யின் இராணுவத்தளபதி மார்க்கன்
வன்னிப்புலிகளிடமிருந்த போது ஆண்டான்குள (வாகரை) பிரதேச இராணுவப் பொறுப்பாளராக இருந்து தற்போது கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) இராணுவத்தளபதியாக இருக்கும் மார்க்கன் எனும் ஐ..மார்க்கன் அவர்கள் முதன்முறையாக ஊடகத்திற்கு அதிலும் நிதர்சனம்.நெற் இணைத்தளத்திற்காக...
ஐரோப்பிய யூனியனின் நிலைப்பாடு தொடர்பாக தமிழ்செல்வன்
புலிகளை தடைசெய்வது தொடர்பான ஐரோப்பிய யூனியனின் போக்குகள், அமைதி நடவடிக்கைகளை மோசமான நிலைக்கே தள்ளுவதாக அமையுமென புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்செல்வன் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்துக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். (more…)
புலிகள் மீதான தடையை ,ந்தியா நீடிப்பு
விடுதலைப் புலிகள் ,யக்கத்தின் மீது விதித்திருக்கும் தடையை ,ந்தியா மேலும் நீடித்திருக்கின்றது. விடுதலைப்புலிகள் அமைப்பு ,ந்தியாவில் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட ,யக்கமாக ,ருக்குமென்று கடந்த 14ஆம் திகதி ,ந்திய மத்திய அரசு அறிவித்ததையடுத்து கடந்த 14ஆம்...
ஓமந்தை இராணுவச் சிப்பாய் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு
வவுனியா ஓமந்தை சிறிலங்கா இராணுவ முன்னரங்க காவலரணில் காவற் கடமையிலிருந்த சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். (more…)
ரமணனுக்கு கேணல் நிலையளித்து விடுதலைப்புலிகள் அறிவிப்பு
மட்டு.வவுணதீவுப் பிரதேசத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான முள்ளாமுனைப் பகுதிக்கு அண்மையில் கருணாஅம்மானின் 'ரிஎம்விபி"யின் விசேட படையணியினர் பதுங்கியிருந்து நடாத்திய கிளைமோர் தாக்குதல் மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தில் புலிகளின் கிழக்குமாகாண இராணுவ புலனாய்வுத்தளபதியும் புலிகளின் கிழக்குமாகாண...
20 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள
20 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஐந்து உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியது. இதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சி நான்கு உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றியுள்ளது. (more…)
காணாமற்போன பெண் சடலமாக மீட்பு.
காணாமற் போயிருந்த குடும்பப் பெண்ணொருவர் சடலமாகக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். நாயன்மார்கட்டு இராமநாதன் வீதியில் கடந்த 19ம் திகதி இரவு 9.30 மணிக்கு அயல்வீட்டில் படம்பார்த்துவிட்டு திரும்பும்போது காணாமற்போன யோகநாதன் பிரேமநந்தினி (32) என்பவரே...
அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்புடன் உள்ளனர்: இராணுவப் பேச்சாளர்
அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்புடன் உள்ளனர்: இராணுவப் பேச்சாளர் தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்புடனே உள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளர்....
இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் இன்று திங்கட்கிழமை யாழ். குடாநாட்டிற்கு சென்று அங்குள்ள நிலவரங்களை ஆராய்ந்துள்ளார்.
இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் இன்று திங்கட்கிழமை யாழ். குடாநாட்டிற்கு சென்று அங்குள்ள நிலவரங்களை ஆராய்ந்துள்ளார். (more…)
புளொட் மத்தியகுழு உறுப்பினர் பாருக் கடத்தலில் மாட்டிக்கொண்டு பூசிமெழுகும் புலிகள்
கடந்த வருடம் 12.12.2005 அன்று புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் சின்னத்தம்பி கணேசலிங்கம் (பாருக்) வவுனியாவிலிருந்து புலிகளால் கடத்திச்செல்லப்பட்டார். அவரது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு வாகனங்கள் புளொட் அமைப்பினரின் உதவியுடன் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது....
புளொட் மத்தியகுழு உறுப்பினர் கடத்தல் தொடர்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் விடுத்துள்ள பத்திரிகை அறிக்கை-
கடந்த 12.12.2005 அன்று முற்பகல் 11மணியளவில் புளொட்டின் மத்தியகுழு உறுப்பினரான சின்னத்தம்பி கணேசலிங்கம் என்கிற பாரூக் அவர்கள் வவுனியா முருகனு}ர் பகுதியில் உள்ள மாணிக்கபுரத்தில் வைத்து புலிகளால் கடத்திச் செல்லப்பட்டார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள்...
வன்னிப்புலிகளின் கிழக்குமாகாண இராணுவ புலனாய்வுத் தளபதியும் வன்னிப்புலிகளின் கிழக்குமாகாண பதில்தலைவருமான ரமணன் கருணாஅம்மானின் ரிஎம்விபியின் விசேட ஊடுருவித் தாக்கும் படையணியின் தாக்குதலில் பலி…..
இன்றுமாலை 6.30மணிக்கு மட்டு.வவுணதீவுப் பிரதேசத்தில் வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான முள்ளாமுனைப் பகுதிக்கு அண்மையில் கருணாஅம்மானின் 'ரிஎம்விபி"யின் விசேட படையணியினர் பதுங்கியிருந்து நடாத்திய கிளைமோர் தாக்குதல் மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தில் வன்னிப்புலிகளின் கிழக்குமாகாண இராணுவ புலனாய்வுத்...