சாலையில் தாறுமாறாக ஓடி வீட்டின் கூரையில் ஏறிய கார்…!!

Read Time:1 Minute, 40 Second

4ee37f1b-ca96-4d14-8eb7-b60c8c031693_S_secvpfவீட்டில் அமர்ந்து ஒரு அமைதியான சூழலில் திகில் படம் பார்க்கும்போது அதில் வரும் சப்தங்களுடன், அந்த சம்பவங்கள் எல்லாம் உங்களுக்கும் நிகழ்வதாக தோன்றினால், எந்த அளவுக்கு திகிலான அனுபவம் கிடைக்குமோ, சுமாராக அதே நிலைதான் ஒரு அமெரிக்க பாட்டிக்கும் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் தனியே வசித்துவரும் ஜாய்ஸ் கிங்ஸ்லே(83) என்பவர் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பயங்கர சப்தம் கேட்டது.

இதையடுத்து அலறியடித்து வெளியில் வந்து பார்த்தபோது, தனது வீட்டின் கூரை மீது ஒரு கார் நின்றிருப்பதைப் பார்த்து ஜாய்ஸ் மேலும் அதிர்ச்சியடைந்தார்.

இந்நிலையில், காரில் வந்த நபர் உடல்நிலை மோசமடைந்ததால் கார் காட்டுப்பாட்டை இழந்ததாக தெரியவந்தது. இதனால், தரையோடு ஒட்டியவாறு கட்டப்பட்டிருந்த ஜாய்ஸின் வீட்டுக் கூரை மீது கார் இவ்வாறு தாறுமாறாக ஏறிச் சென்றது.

இச்சம்பவத்தால், காரை ஓட்டிவந்த நபருக்கோ, வீட்டுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிறப்புறுப்பு மாற்று ஆபரேஷன் மூலம் முழுப் பெண்ணாக மாறிப்போன மகனை ஆண்கள் சிறையில் அடைத்ததால் தவிக்கும் தாய்…!!
Next post இதய தானம் செய்தவர் குடும்பத்துக்கு வித்தியாசமான முறையில் நன்றி செலுத்திய இளைஞர்…!!