யார் இவர்கள்? யார் இந்த கே.பி?, விநாயகம்?, அனந்தி எழிலன்?, சிவாஜிலிங்கம்?, கஜேந்திரகுமார்?, சிறிதரன்???? -சுகுனா…!!

Read Time:33 Minute, 11 Second

timthumbஇலங்கை அரசியலில் குறிப்பாக தமிழ் அரசியலில் அண்மைக்காலமாக மிகவும் பரபரwho is thisப்பாக பேசப்படும் சிலர் பற்றி ஆழமாக ஆராய வேண்டியிருக்கிறது.

அதற்கு முன்னதாக தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை மாற்றிப்போட்ட விடுதலைப் புலிகள் மீதான இறுதிக்கட்ட யுத்தம் பற்றியும் அதன் பின்னரான புலிகளின் தலைமை குறித்தும் பார்க்க வேண்டியிருக்கின்றது.

இரண்டாயிரத்து ஒன்பது, மே பதினெட்டாம் திகதி யுத்தம் நிறைவுக்கு வந்ததாக அரசாங்கம் அறிவித்தபோது, கேபி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதனோ, புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இறுக்கிறார் என்று அறிவித்தாhர். அனால் அவ்வாறு அவறிவித்த அவர் மறுநாளே அவர் இறந்துவிட்டதாகவும், புலிகள் இயக்கத்திற்கு தானே தலைமை ஏற்கப்போவதாகவும் அறிவித்தார்.

யார் இந்த கேபி?

கேபி என்று நன்கு அறியப்பட்ட குமரன் பத்மநாதன் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தேவையான அனைத்து ஆயுதங்களையும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு மிகத் தந்திரமாக வன்னிக்கு அனுப்பிவைத்துக் கொண்டிருந்த முக்கிய போராளி. ஒரு காலத்தில் பத்துக்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுக்களுடன் பல்வேறு பெயர்களில் உலகம் முழுவதும் சுற்றி வந்துகொண்டிருந்த கேபியை பிடிக்க சிறிலங்கா மாத்திரமல்ல, இந்தியாவும் தீவிரமாக முயன்று கொண்டிருந்தது. அனைவருக்கும் தண்ணீர் காட்டிக்கொண்டு உலகம் முழுவதும் சுற்றிவந்த கேபி, பிரபாகரனின் மிக நம்பிக்கைக்கு உரியவராகவும் மிக நெருக்கமான நண்பராகவும் இருந்தார்.

புலிகளின் அனைத்து விவகாரங்களையும் இலங்கைக்கு வெளியே கையாண்டவர் இவரே. புலிகளின் பல ஆயிரம் கோடி சொத்துக்களையும் வர்த்தக நடவடிக்கைகளையும் இந்த கேபியே நிர்வகித்தும் வந்தார்.

ஆனால் புலிகளின் சர்வதேச அலுவலகங்களை நிர்வகிக்க வன்னியில் தலைமையால் நியமிக்கப்ட்ட கஸ்ரோ என்ற ………….. அவர், தனது நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக தனது உறவினரான நெடியவனை நோர்வேக்கு அனுப்பி அவரிடம் பொறுப்புக்களை ஒப்படைக்க, கேபியின் முக்கியத்துவம் திட்டமிட்டபடி குறைக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் கேபி இயக்கத்தின் அனைத்து நடவடிக்கையிலிருந்தும் ஓரம் கட்டப்பட்டார். இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து புலிகளின் அனைத்து வர்த்தக நடவடிக்கைளும் கஸ்ரோவினதும் நெடியவனினதும் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது.

ஆனால் யுத்தம் தீவிரமடைந்தபோது, புலிகளின் சொத்துக்களை தனிப்பட்ட வகையில் உரிமையாளர்களாக இருந்தவர்களிடமிருந்து பாதுகாக்க கேபியே சரியான ஆள் என்பதைப் புரிந்துகொண்ட பிரபாகரன், கேபியிடம் மீண்டும் பொறுப்புக்களை ஒப்படைத்தார்.

இறுதிக்கட்ட யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது இயக்கத்தையும் தலைமையையும் காப்பாற்றுவதற்காக கொழும்புடன் நேரடித் தெடர்பை ஏற்படுத்திய கேபி, கோத்தபாயாவுடனும் பசில் ராஜபக்சவுடனும் தொடர்பை ஏற்படுத்தினார். அவருடைய நோக்கம் எல்லாம் தலைமையைக் காப்பாற்றுவதாகத்தான் இருந்தது.

ஆனால், அது முடியாமல்போன பின்னர், முள்ளிவய்க்கால் அவலம் நடந்து முடிந்த பின்னர், இயக்கத்தின் தலைமைப்பதவியை கேபி தானே ஏற்றுக்கொள்ளவேண்டியதாயிற்று. ஆனால் தான் முன்னர் தலைமையைக் காப்பாற்றுவதற்காக தொடர்புகொண்ட தொலைபேசி இலக்கக்தை வைத்து தன்னை சிறிலங்கா உளவுத்துறை பின்தொடர்வதை கேபி எப்படி கவனிக்காமல் இருந்தார் என்பது இன்றுவரை தெரியவரவில்லை.

வன்னியில் புலிகள் முற்றாக மௌனமாக்கப்பட்ட பின்னர், சிறிலங்காவின் முழுக் கவனமும் கேபி மீது திரும்பியது. புலிகள் இயக்கத்தை வேரோடு பிடுங்கவேண்டுமெனில் கேபியையும் கைது செய்ய வேண்டும் என்ற நிலை. அந்த முயற்சியிலும் சிறிலங்கா வெற்றி கொண்டது என்றே சொல்லலாம்.

கேபி மட்டும் கைது செய்யப்படாமல் இருந்திருந்தால், இன்றும் புலிகள் இயக்கம் கேபியின் தலைமையில் இன்னமும் உத்தேவகத்துடன் வெளிநாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும்.

கேபியை சிறிலங்கா கைது செய்யவில்லை என்றும் அவரே தானாக சரணடைந்தார் என்றும் இப்போதும் வாதிடும் சிலர் இருக்கிறார்கள். புலிகளின் பலகோடி சொத்துக்களை நிர்வகித்துக் கொண்டு, உலகத் தலைவராக வலம்வரக்கூடிய நிலையில் இருந்த கேபி தானாக சரணடைந்து ஒரு சிறைக் கைதிபோல வாழவேண்டிய தேவை அவருக்கு ஏன் ஏற்படவேண்டும்?.

இன்றும் கூட செஞ்சோலை சிறுவர் இல்லத்தை பராமரிக்கின்ற கேபி அந்த இல்லத்திலிருந்து சிறுநீர் கழிப்பதற்கு செல்கின்ற போதும் அவரைப் பின்தொடர்ந்து பாதுகாவலர்கள் அவரை கண்காணிக்க செல்கின்ற அவலம் அவர் விரும்பி ஏற்றுக் கொண்டதாக இருக்க முடியாது.

கேபி கைதுசெய்யப்பட்டு சிறிலங்கா கொண்டு வரப்பட, புலிகளின் அனைத்துச் சொத்துக்களையும் தொடர்ந்து நிர்வகிக்கின்ற பொறுப்பு நெடியவனைத் தொடர்ந்தது. நெடியவனின் கட்டுப்பாட்டின்கீழ், புலிகளின் அனைத்து செயலகங்களும் இன்றுவரை இயங்கி வருகின்றன. அவை அனைத்துல செயலகம் என்ற பெயரிலும் சில நாடுகளில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரிலும் இவை இயங்கி வருகின்றன.

யார் இந்த விநாயகம்?

முள்ளவாய்க்காலில் புலிகள் முழுமையாக மௌனிக்க வைக்கப்பட்ட பின்னர், உயிர தப்பிய போராளிகள் பலர் வெளிநாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கினர். பலர் செட்டிகுளம் முகாமில் இருந்து பணம் கொடுத்து வெளியேறியதாகவும் அப்போது கூறப்பட்டதுண்டு.

இவ்வாறு புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்த போராளிகள் அப்போது தான் ஒரு உண்மையை உணர்ந்தார்கள். தாங்கள் போராட்டம் என்ற பெயரில் வன்னிக் காடுகளுக்குள் காலில் செருப்புக்கூட இல்லாமல் போராடிக் கொண்டிருக்க, அந்தப் பேராட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, புலம்பெயர் மண்ணில் ஒரு கூட்டம் சுக போகங்களை அனுபவித்துக் கொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

அவ்வாறு போருக்குப் பின்னர் புலம்பெயர்ந்த போராளிகள் அங்கு இயக்கத்தை மீண்டும் புதுப்பிக்க முயல்வதாகவே கூறிக் கொண்டார்கள். அவ்வாறு புலம்பெயர்ந்த போராளிகளில், முக்கியமானவர் விநாயகம் ஏன்ற சேகரப்பிள்ளை விநாயகமூர்த்தி.

புலிகளின் புலனாய்வுத்துறையில் பொறுப்பாளராக இருந்த பொட்டு அம்மானின் உதவியாளராக இருந்த இந்த விநாயகம், யுத்தம் நடைபெற்ற காலத்தில் இந்தியாவில் இருந்ததாகக் கூறப்பட்டது. பின்னர் பிரான்ஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்த அவர் புதிதாக புலம்பெயர்ந்த போராளிகளை ஒன்றிணைத்து அமைப்புக்கு புத்துயிர் ஊட்டப் பேவதாக கூறினார்.

அமைப்பின் சொத்துக்களை தனது பொறுப்பில் எடுக்க அவர் முயன்றபோது நெடியவன் தரப்பிற்கும் அவருக்குமிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. பல இடங்களில் துப்பாக்கி மோதல்கள் கூட ஏற்பட்டன.

புலம்பெயர் நாடுகளில் மாவீரர் தின வைபவங்கள் இரண்டு தரப்பாலும் தனித்தனியாக நடாத்தப்பட்டன. விநாயகம் தனது அணிக்கு தலைமைச் செயலக அணி என்று பெயரிட, நெடியவன் தரப்பினர் அனைத்துலக செயலகம் என்ற பெயரிலும் விநாயகம் தரப்பினர் தலைமைச் செயலகம் என்ற பெயரிலும் இயங்கத் தொடங்கினர்.

புலம்பெயர் நாடுகிளில் ஏற்கனவே இயங்கிவந்த அனைத்துலக செயலக செயற்பாடுகள் நெடியவன் தலைமையில் எதுவிட இடையூறும் இன்றி தொடர்ந்து கொண்டிருக்க, மிகச் சொற்ப போராளிகளைக் கொண்டு விநாயகம் தனது தலைமைச் செயலக அணியை நடாத்திவருகிறார்;.

இந்த இரண்டு அணியினருக்குமான மோதல்களை சாத்திரி என்ற முன்னாள் போராளி தனது கட்டுரை ஒன்றில் விலாவாரியாக விபரித்திருந்தார். இந்த விநாயகம் யார் என்பது பற்றிய சந்தேகங்களை அவர் தனது கட்டுரையில் எழுப்பியிருந்தார்.

யார் இந்த அனந்தி எழிலன்

புலிகளின் திருகோணமலை அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர் எழிலன் என்ற சசிதரன். யுத்தம் முடிந்த பின்னர் எழிலன் இலங்கை இராணுவத்துடன் பணியாற்றுவதாக பரவலாக கதைப்பட்டதுண்டு;.

விமான நிலையத்தில் இலங்கைப் படையினருடன் இருந்து கொண்டு தப்பிச் செல்லூம் புலிகளை காட்டிக் கொடுக்கும் பணியை எழிலன் செய்து வருவதாகவும் அப்போது கூறப்பட்டது.

அதே எழிலனின் மனைவியான அனந்தி, கடந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்படும் வரை அவர் யாராலும் அறியப்படாதவராகவே இருந்தார்.

இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, புலிகள் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக புகார்கள் உண்டு. பலவந்தமாக ஆட்களை கடைசிக் கட்டத்திலும் இணைத்தார்கள். அவ்வாறு பலவந்தமாக இணைக்கப்ட்டவர்கள் தான் பின்னர் சரணடைந்த பன்னிரண்டாயிரம் போராளிகளில் கணிசமானவர்கள்.

அவ்வாறு பலவந்தமாக ஆட்களைச் சேர்த்தவர்களில் எழிலன் முக்கியமானவர் என்று கூறப்படுகின்றது. அத்தகைய ஒரு போராளியின் மனைவியான அனந்தி திடீரென்று தேர்தல் களத்தில் இறக்கப்பட்டார்.

அந்தச் சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் இந்த அனந்தி யார் என்பதே மக்களுக்கு, அதுதான் வாக்காளர்களுக்கு தெரியாமலே போயிருக்கும். தேர்தல் நெருங்கிவந்த நேரத்தில் அனந்தியின் வீட்டை முற்றுகையிட்ட இராணுவத்தினர், அனந்தியை பிரபல்யமாக்கினர். அவர் ஊடகங்களில் தலைப்புச் செய்தியானார்.

கிராமங்கள் எங்கும் அனந்தியின் பெயர் உச்சரிக்கப்பட அனந்தி எண்பதாயிரம் வாக்குகளை அள்ளிக் குவித்தார். அனந்திக்கு இத்தனை பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தவர்கள் வேறு யாருமல்ல, இராணுவத்தினரே தான்.

தாம் இவ்வாறு அனந்தி மீது தாக்குதல் நடாத்தினால் அது அவருக்கு சாதகமாகவே போகும் என்பது இராணுவத்தினருக்குத் தெரியாததல்ல. எந்தக் குழந்தையாலும் புரிந்து கொள்ளக்கூடிய அந்த விடயத்தை இராணுவத்தினர் புரிந்து கொள்ளவில்லை என்று யாராவது வாதிட்டால் அதற்கு நாம் ஒன்றும் செய்யமுடியாது.

அனந்தி வெற்றி பெற்று மாகாண சபைக்கு உறுப்பினரானதும் தனக்கு அமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட தமிழரசுக்கட்சித் தலைமை அவரை தூர வைக்கவே விரும்பியது.

ஆனால் அனந்தி, கட்சியின் எந்தக் கட்டுப்பாட்டையும் கருத்தில் கொள்ளவில்லை. தன்னிச்சாயாக ஜெனீவா போனார். தன்னிச்சையாக அறிக்கைகளை விடுத்தார். அவரின் ஒவ்வொரு நகர்வுகளையும் புலம்பெயர் மண்ணில் இருந்து சிலர் ஆதரவளித்தனர். அவ்வாறு ஆதரவளித்தவர்கள் வேறு யாருமல்ல. தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் விநாயகம் குழுவினரே என்பது பின்னரே தெரிய வந்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று பகிரங்கமாகவே அனந்தி கோரிக்கையை முன்வைத்தார். தான் சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்த பின்னர், அதற்கு எதிராக முடிவெடுத்ததுடன், தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு பரப்புரை செய்தார்.

தேர்தல் பகிஷ்கரிப்பால் மகிந்த ராஜபக்ச தான் பயன் பெறுவார் என்பதை சின்னக்குழந்தை கூட அறிந்திருந்த போது அனந்தி அறியாமல் இருந்திருக்க முடியாது. அவரது விருப்பம் அதுவாக இருந்ததோ தெரியவில்லை.

யார் இந்த சிவாஜிலிங்கம்

அனந்தி எழிலனின் ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் அவருக்கு துணையாக இருப்பவர் இந்த சிவாஜிலிங்கம். தன்னை மிகத் அதீவிர தேசியப் பற்றாளராகவும், புலி ஆதரவாளராகவும் காட்டிக் கொள்ள விரும்புபவர்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் சுகவீனமடைந்த பிரபாகரனின் பெற்றோரின் நலன்களைக் கவனித்த சிவாஜிலிங்கம், அதற்காக அரசாங்கத்துடன், குறிப்பாக அப்போதைய பாதுகாப்பு செயலாளருடன் நெருக்கமாகவே செயற்பட வேண்டியிருந்தது. எந்த நேரத்திலும் பாதுகாப்பு செயலாளருடன் தொடர்பு கொள்ளக்கூடிய அளவிற்கு அவரின் நட்பு வட்டாரத்திலிருந்தவர் இந்த சிவாஜிலிங்கம்.

புலிகளுக்கு ஆதவாக அல்லது தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் துணிந்து சொல்லக்கூடிய துணிச்சலுள்ளவர். இப்படித்தான் தமிழ்மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தத் துணிச்சல் அவருக்கு எப்படி வந்தது என்று யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.

யுத்தம் முடிவடைந்த பின்னர் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், மகிந்த ராஸபக்சவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது. அப்போது அதற்கு எதிராக களத்தில் குதித்த சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கினார். அதனால் பயனடைந்தது வேறு யாருமல்ல, மகிந்த ராஜபக்ச மட்டும் தான்.

அவருக்குத் தெரியும் தனக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று. அப்படியெனில் தன்னை எதிர்த்துப் போட்டியிடுபவருக்கு தமிழர்களின் வாக்குகள் செல்லக்கூடாது எனில் அந்த வாக்குகளை பிரிக்கக்கூடிய ஒருவர் போட்டியிட வேண்டும். அதற்கு சரியான ஆள் சிவாஜிலிங்கம் தான்.

சிவாஜிலிங்கம் அந்தத் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு விழ இருந்த வாக்குகளை பிரித்தாரோ என்னவோ, ஆனால் சிவாஜிலிங்கம் போட்டியிடுவதை காரணம்காட்டி மகிந்தவால் பல ஆயிரம் வாக்குகளை சிங்கள மக்களிடம் பெற முடிந்தது.

அதே போலத்தான், சிவாஜிலிங்கம் கடந்த பொதுத் தேர்தலிலும் நடந்து கொண்டார். மகிந்தவை எதிர்த்து போட்டியிடுவதாகக் கூறிக்கொண்டு குருநாகல் மாவட்டத்தில் போய் போட்டியிட்டார். அதனால் சிவாஜிலிங்கம் நன்மை அடையவில்லை ஆனாலும், மகிந்த நன்மை அடைந்தார்.

சிவாஜிலிங்கத்தைக் காட்டி அவரால் சிங்கள மக்களின் வாக்குகளை அதிகமாகப் பெறமுடிந்தது. இந்த இரண்டு தேர்தல்களிலும் சிவாஜிலிங்கம் மகிந்த தரப்பினரிடம் பணத்தை வாங்கிக் கொண்டே போட்டியிடுகின்றார் என்று அவ்வப்போது தெரிவிக்கப்பட்டது.

யார் இந்த கஜேந்திரகுமார்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இதுவரை தன்னை மீகத்தீவிர தேசியப் பற்றாளராகவே காட்டி வருகிறார். தமிழ்த் தேசிய்க கூட்டமைப்பிற்கு மாற்றாக தானே இருப்பதாக காட்டிக் கொள்ளும் கஜேந்திரகுமார், புலிகளுக்கு ஆதரவாக பேசுவதற்கே எல்லோரும் அஞ்சிய காலத்திலேயே, எந்தவித அச்சமும் இன்றி புலி ஆதரவுக் கருத்துக்களைப் பேசியவர்.

கொழும்பில் வாழ்ந்து கொண்டே, தன்னை தமிழ்த் தேசியவாதியாக காட்டிக்nகண்ட அவரது தந்தை குமார் பொன்னம்பலம், தனது குடும்ப நண்பர்களான சிறிமா விட்டில் ஒரு குடும்ப உறுப்பினர் போல உரிமையோடு பழகியவர். அரசாங்கத்திற்கு பிடிக்காத விடயத்தை அறிக்கையாக வெளியிடுவதற்கு முன்னரே அதுபற்றி சிறிமாவுக்கு கூறிவிட்டு அறிக்கை வெளியிடுபவர் என்று கூறப்படுவதுண்டு.

அவரது புதல்வரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருபவர். ஒவ்வொரு தடவை ஐநா மனித உரிமைப் பேரவை கூடும்போதும் தவறாது அங்கே பிரசன்னமாகி விடும் கஜேந்திரகுமார், அந்த ஐநா பேரவையால் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லை என்றும் திரும்பத் திரும்பக் கூறுவார்.

ஆனாலும் பல லட்சங்களைச் செலவு செய்து கொண்டு ஜெனிவாவுக்கு பறந்து செல்வார். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்த போது ஒட்டுமொத்த புலம்பெயர் அமைப்புக்களும் அதற்கு ஆதரவாக குரல் கொடுத்த போதும் அதனை எதிர்த்தவர் இந்த கஜேந்திரகுமார். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலின் போது அனந்தியைப் போலவே கஜேந்திரகுமாரும் மகிந்தவின் வெற்றியையே விரும்பினார்.

யார் இந்த சிறிதரன்

யுத்தம் முடிவடைந்த பின்னரும் வடக்கில் இராணுவம் தனது கெடுபிடிகளைத் தளர்ததாத காலத்திலேயே புலிகளின் ஆதரவாளனாக தன்னை இம்காட்டிக் கொண்டவர் இந்த சிவஞானம் சிறிதரன்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் நடந்த பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் புலிகளினால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட கஜேந்திரன், பத்மினி போன்றவர்கள் வெளியேற்றப்பட்டு போட்டியிட சந்தாப்பம் மறுக்கப்பட்ட போது, கூட்டமைப்பிற்கு ஒரு புலி முகம் தேவைப்பட்டது. அப்போது அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட சிறிதரன், மிகச் சில நாட்களிலேயே ஊடகங்களில் முக்கிய செய்தியானார்.

பகிரங்கமாகவே புலி ஆதரவு கருத்துக்களை எந்தவித அச்சமும் இன்றி கூறிவந்த சிறிதரன் மீது அனுராதபுரத்தில் வைத்து ஒரு தடவை துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்ப்ட்டது. அவர் பயணம் செய்த காருக்கு குறிவைத்தவர்கள் அவருக்கு படாமல் சுட்டனர். சுட்டவர்களின் இலக்கு சுடுவது மட்டுமல்ல, அவருக்கு படாமல் சுடுவதும் தான்.

அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு பிரபல்யமானவராக வளர்த்துவிட சிலர் விரும்பியதாக அப்போது கூறப்பட்டது. தங்களுக்கு வேண்டிய ஒருவர் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்கு வருவதை விரும்பியவர்களே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கலாம் என்றும் அப்போது கூறப்பட்டது.

அவரது சகோதரர்களால் நடாத்தப்படும் தமிழ்வின், லங்காசிறி இணையத்தளங்கள் ஒரு கட்டத்தில் இலங்கையில் தடைசெய்து வைக்கப்பட்டிருந்த போதும், அந்த இணையத்தளங்களின் செய்தியாளர்கள் பகிரங்கமாகவே இயங்கி வந்தனர். ஏன் கொழும்பில் அதற்கொன சிறிதரனின் மேற்பார்வையில் அலுவலகமே இயங்கி வந்தது.

இவையெல்லாம் எப்படி சாத்தியமாகின என்பது ஒன்றும் விடைகாண முடியாத கேள்விகளல்ல. பல தடவைகள் சிறிதரன் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் ஒரு விசாரணையைப் பற்றியும் பின்னர் யாரும் அறிந்து கொள்ளவில்லை.

அண்மைக்கால சம்பவங்கள்

கடந்த பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், சுவிற்சர்லாந்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கேவிந்தன் கருணாகரன் (ஜனா) உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை நடாத்தியவர்கள் வேறு யாருமல்ல, விநாயகம் குழுவினர் தான். அவர்களின் கோரிக்கை தாங்களே வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதாகத் தான் இருந்தது. மிரட்டும் பாணியில் அவர்கள் நடந்து கொண்ட போது, அவர்களிடம் பிடிகொடுக்கமல் பேசிய மாவை சேனாதிராஜா, தம்பிமாரே, தலைவர் கூட என்னுடன் இப்படிப் பேசியதில்லை என்று பதிலளித்ததாக அப்போது செய்திகள் வெளிவந்திருந்தன. கூட்டத்தை கூட்டியவர்களின் நோக்கம் அனந்தியை வேட்பாளராக்க வேண்டும் என்பதும், கஜேந்திரகுமார் அணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்க்க வேண்டும் என்பதாவே இருந்தது.

அவர்களின் அந்த முயற்சி தோல்வியில் முடிய, தேர்தலில் எப்படியும் கஜேந்திரகுமார் அணியை வெற்றிபெறச் செய்ய விநாயகம் குழுவினர் பகீரதப் பிரயத்தனம் செய்தனர். அவர்களுக்காக, அவர்களின் பரப்புரைக்காக கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைத்தனர்.

இது நடந்தது கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக. மிகஅண்மையில் ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா பிரேரணையைக் கொண்டுவந்தபோது, அதில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பும் வலியுறுத்தப்பட்டது.

அதனை ஒரு சிறந்த நகர்வாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உலகத் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்களும் வரவேற்றன. ஆனால் அங்கு சென்றிருந்த கஜேந்திரகுமார், அனந்தி, சிவாஜிலிங்கம் போன்றவர்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டி அதற்கு எதிராக பரப்புரை செய்தனர். அந்தக் கூட்டதைக் கூட்டடியவர்கள் வேறு யாருமல்ல, அதே விநாயகம் குழுவினர்தான்.

இந்த அணியினரின் ஆலோசனையின் பேரிலேயே வடக்கு முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரனும் இயங்குகின்றாரா என்ற கேள்வி இப்பேது எழுவதை தவிர்க்க முடியவில்லை. கடந்த பொதுத் தேர்தலின் போது கஜேந்திரகுமார் அணியினரை வெல்ல வைக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் படாதபாடுபட்டார். தேர்தலில் நடுநிலைமை வகிக்கப் போவதாக முதலில் அறிக்கை விட்ட முதலமைச்சர், கடைசி முயற்சியாக அவர்களின் வெற்றிக்காக அவர்களுக்கு ஆதரவாகவும் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் (ஜெனீவா கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர்) ரெலோ தலைவர்கள் பாரிசில் கூட்டம் ஒன்றை நடாத்திக் கொண்டிருந்த போது அங்கே குழப்பம் விளைவிக்கப்பட்டது. செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம், கோவிந்தன் கருணாகரன் (ஜனா) ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் நுழைந்த விநாயகம் குழுவினர் ஜனாவை தாக்குவதற்கு முயற்சித்தனர். கடைசியில் பிரான்ஸ் பொலிசார் வந்து ரெலோ தலைவர்களைப் காப்பாற்றியது.

அதேபோன்ற ஒரு சம்பவம் பின்னர் அவுஸ்திரேலியாவிலும் நடைபெற்றிருக்கிறது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் நுழைந்த விநாயகம் குழுவைச் சேர்ந்த சில இளைஞர்கள் குழுப்பம் விளைவித்துள்ளனர்.

நடந்த சம்பவங்ளையும் நடக்கின்ற சம்பவங்களையும் பார்க்கின்ற போது மேலே நாம் குறிப்பிட்ட அனைவருமே ஒரு அணியின் வழிநடத்தலில் இயங்கி வருவதை உணரலாம். இவர்கள் அனைவருமே தமிழ்த் தேசியத்தின் அதிதீவிர பற்றாளர்கள் போலவே தங்களை இனம்காட்டி வருகின்றனர்.

தங்களையே உண்மையான புலி ஆதரவாளர்கள் போலவே காட்டி வருகின்றனர். இவர்கள் அனைவரையும் விநாயகம் தலைமையிலான தலைமைச் செயலக குழுவே வழிநடாத்தி வருகின்றது.

சில வாரங்களுக்கு முன்னர் சிறிலங்கா கடற்படையினர் ஒரு இளம்பெண்ணையும் அவரது குழந்தையும் அவர்களின் வீட்டில்கொண்டுவந்து விட்டுச் சென்றதாக ஒரு செய்தி. செய்தி அறிந்து நாவற்குழியில் உள்ள அந்த இளம்பெண்ணின் வீட்டை செய்தியாளர்கள் முற்றுகையிட்ட போது, அவர்கள் எதையும் பேசுவதற்கு தயாராக இல்லை.

ஆனால் அந்த இளம்பெண்ணும் குழந்தையும் செட்டிகுளம் தடுப்பு முகாமில் இருந்தபோது அவர் யார் என்று அடையாளம் கண்டுகொண்ட படையினர் அவரை அழைத்துச் சென்றதாகவும், இதுகாலவரை கடற்படையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த அவர்களை அவர்களின் வீட்டுக்கு கொண்டுவந்த கடற்படையினர் வீட்டில் விட்டுச் சென்றதாகவும் மட்டும் தகவல் பெறமுடிந்தது. தங்களை எந்தத் தகவலும் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையில் விடுதலை செய்ததாகக்கூறிய அந்தப் பெண் எதனையும் பேசுவதற்கு தயாராக இருக்கவில்லை.

அந்த இளம்பெண் வேறு யாருமல்ல இன்று பாரிசில் விடுதலைப் புலிகளின் ஒரு குழுவுக்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் விநாயகத்தின் மனைவி தான் அவர்.

என்ன இப்போது தெரிகின்றதா? நாம் மேலே கூறியவர்கள் எல்லாம் யாருடைய வழிகாட்டலில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்று?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாரிஸ் தாக்குதல்; இலங்கையர்கள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சு அவதானம்…!!
Next post பாரிஸ் பயங்கரவாத தாக்குதலின் நேரடி அதிர்ச்சி வீடியோ காட்சி..!!