பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்கிறார் பிரதமர்

Read Time:2 Minute, 2 Second

பயங்கரவாத செயற்பாடுகளும் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் வௌ;வேறானவையென்றும் அவற்று அரசாங்கம் இரு வௌ;வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பாராளமன்றத்தில் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிக்கும்வரை அதற்கெதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை ஓயப்போவதில்லை. அதேநேரம் தமிழ் மக்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருப்பின்அதனை ஆராய்ந்து நியாயமான அதிகாரப்பகிர்வின் மூலம் அதற்கு தீர்வு காணப்படும். எனவே பயங்கரவாதப் பிரச்சினையையும், தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் ஒன்றாக குழப்பிக்கொள்ள வேண்டாமெனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார். தமிழ்மக்கள்மீது அரசாங்கம் போர் தொடுப்பதாக தமிழ்க்கூட்டமைப்பு எம்.பி இரா.சம்பந்தன் குற்றம் சாட்டுகிறார். இதுதவறானது. அரசாங்கம் பயங்கரவாதத்தை ஒழிக்கும் யுத்தத்தையே மேற்கொண்டுள்ளது. பாராளுமன்றத்தின் ஒழுங்கு விதிகள் சம்பந்தமான சில விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் அனைவரும் செயற்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். சபாநாயகர் மட்டுமன்றி நம் அனைவருக்கும் அதற்கான பொறுப்புள்ளது. இந்நாட்டை சுபிட்சமாக்கும் வகையிலேயே இம்முறை வரவுசெலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆசியாவின் கவர்ச்சிகரமான ஆண், நடிகர் ஷாருக்கான்: இங்கிலாந்து பத்திரிகை கணிப்பு
Next post முஷரப்புக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி: மீண்டும் ஜனாதிபதியாக பதவி ஏற்க தடை நீங்கியது