கடல் ஆமை வைத்திருந்த மன்னார் மீனவர் கைது…!!

Read Time:2 Minute, 45 Second

amai_arest_002கடல் ஆமை ஒன்றினை மீன் வாடியில் வைத்திருந்த மீனவர் ஒருவரை மன்னார் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
மன்னார் தாழ்வுபாட்டு கடற்கரைப் பகுதியில் உள்ள மீன் வாடி ஒன்றில் உயிரிழந்த நிலையில் சுமார் 50 கிலோ கிராம் நிறை கொண்ட கடல் ஆமை ஒன்றை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளதோடு,

குறித்த மீன் வாடியின் உரிமையாளரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வழத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மன்னார் தாழ்வுபாட்டு கடற்கரைப்பகுதியில் உள்ள மீன் வாடி ஒன்றில் கடல் ஆமை ஒன்று பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் உள்ள கடற்படையினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலின் அடிப்படையில்,

இன்று மதியம் குறித்த வாடிக்குச் சென்ற கடற்படையினர் உயிரிழந்த நிலையில் குறித்த கடல் ஆமையினை மீட்டுள்ளதோடு, மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் பொலிஸார் மற்றும் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் மன்னார் தாழ்வுபாட்டு கடற்கரைப்பகுதியில் உள்ள குறித்த மீன் வாடிக்குச் சென்று குறித்த ஆமையினை மீட்டுள்ளதோடு குறித்த மீன் வாடியின் உரிமையாளரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தற்போது குறித்த மீன் வாடியின் உரிமையாளரான மீனவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

குறித்த கடல் ஆமை சுமார் 50 கிலோ கிராம் எடை கொண்டது என மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின் குறித்த சந்தேக நபர் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ளப் பாதிப்புக்க​ளை ஹெலிகாப்டர் மூலம் ஜெயலலிதா பார்வையிட்டார்..!!
Next post இலங்கை அகதி தற்கொலை முயற்சி..!!