மழை விட்டும் தீராத சோகம்: சாக்கடையாக மாறும் தண்ணீரால் அவதியுறும் மக்கள்…!!

Read Time:2 Minute, 8 Second

thrunidavur_001கடந்த நாட்களாக சென்னையை வாட்டி வதைத்த மழையால் மக்கள் அனைவரும் வீடுகளை இழந்து உணவின்றி தவித்துள்ளனர்.
தற்போது மழை நின்ற பின்பும் சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதி மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

சென்னை திருநின்வூரில் உள்ள பெரியார் நகர், முத்தமிழ் நகர், திருவேங்கடம் நகர், சுதேசி நகர், கன்னிமா நகர் உள்ளிட்ட அனைத்து இடங்களில் உள்ள குடியிருப்புளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு உறவினர்கள் வீடுகளுக்கு தஞ்சம் புகுந்தனர்.

மேலும் சில மக்கள் தண்ணீரில் தத்தளித்தபடியே வீடுகளில் வசிக்கின்றனர், அவர்களுக்கு இதுவரை எந்த உதவுவியும் கிடைக்கவில்லை, அதுமட்டுமின்றி இவர்கள், இரும்பு பேரல்களை படகு போல் கட்டி தண்ணீரில் நீந்தி சென்றி அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரணப்பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இங்கு இருக்கும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் செல்ல வழியில்லாததால் சாக்கடையாக மாறிவிட்டது, இதன் காரணமாக கொசுத்தொல்லை மட்டுமின்றி பலருக்கும் காய்ச்சல் பரவியுள்ளது.

ஆனால், அப்பகுதியில் உள்ள திருநின்றவூர் ஏரி நிரம்பி வழிவதால், வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம் வடியாமல் நிற்கிறது, ஏரியில் நீர் குறைந்த பின்னர் வெள்ளம் வற்றும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரியானாவில் ரெயில்கள் நேருக்குநேர் மோதல்: டிரைவர் பலி…!!
Next post மிகப்பெரிய எரிமலையான “எட்னா” வெடித்து சிதறியது…!!