ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படை தாக்குதல்: அப்பாவி மக்கள் 15 பேர் பலி..!!

Read Time:1 Minute, 32 Second

downloadஅரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படையை எதிர்த்து ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா கூட்டுப்படைகள் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், அங்குள்ள ஹஜா மாகாணத்தில், பானி அல் ஹதாத் என்ற கிராமத்தில் சவுதி கூட்டுப்படைகளின் போர் விமானங்கள் நேற்று முன்தினம் இரவு குண்டு வீச்சு நடத்தின. இந்த குண்டு வீச்சில் அப்பாவி மக்கள் 15 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

ஆனால் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என சவுதி கூட்டுப்படை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தில் ஐ.நா. சபையின் ஏற்பாட்டில் சண்டை நிறுத்த பேச்சு வார்த்தை தொடங்குவதற்கு முன்பாக இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வங்காளதேசத்தில் அனைத்து சமூகவலை தளங்கள் மீதான தடைகள் நீக்கம்..!!
Next post மனைவியைக் கொன்ற கணவன் தற்கொலை – கள்ளத் தொடர்பால் விளைந்த வினை..!!